Latest News

October 14, 2013

மங்களவை கைது செய்ய உத்தரவு
by admin - 0

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாத்தறை நீதவானினால் இன்று திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கோரி பாத யாத்திரையொன்று இடம்பெற்றது.

இந்த பாத யாத்திரையில் கலந்துகொண்டவர்கள் மீது மாத்தறை பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உட்பட 12 பேரை கைது செய்யுமாறு மாத்தரை நீதவான் உத்தரவிட்டார்.
« PREV
NEXT »

No comments