Latest News

October 23, 2013

கென்ய அரசாங்கம் மறுப்பு
by admin - 0

எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை பகிஸ்கரிக்குமாறு ஆபிரிக்க நாடுகளிடம் கென்யா பிரசாரம் செய்வதாக வெளிவந்த
செய்தியை கென்ய அரசாங்கம் மறுத்துள்ளது. மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்க கென்யா தயாராகி வருவதாகவும் தாம் மிக உயர்மட்டத்தில் பங்கேற்பது உறுதி எனவும் கென்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுநலவாயத்தில் தனது அங்கத்துவத்தை கென்யா பெரிதும் மதிக்கின்றது எனவும் இந்த உறவை பாதிக்கும் எவ்வித நடவடிக்கையிலும் அது ஈடுபடாதெனவும் கென்ய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. கென்ய ஜனாதிபதி உகுறு கென்யாட்டா மற்றும் உப ஜனாதிபதி வில்லியம் றுட்டோ ஆகியோரை சர்வதேச குற்ற விசாரனை நீதிமன்றில் நிறுத்தியமைக்கு எதிராக தீர்க்கமான நிலைப்பாட்டை எட்ட பொதுநலவாயம் தவறியுள்ளதையிட்டு பொதுநலவாய மாநாட்டை பகிஸ்கரிக்குமாறு ஆபிரிக்க நாடுகளிடையே கென்யா பிரசாரம் செய்வதாக அந்த நாட்டு பத்திரிகையான ஸ்ரார் செய்தி வெளியிட்டிருந்தது. இதை மறுத்து கென்ய அரசாங்கம் விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments