பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார்
சிற்றூர்தி தடம்புரண்டு விபத்துக்குள்ளானத்தில் 4 பேர் பாடுகாங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் பருத்தித்துறை வீதி வல்வை முனியப்பர் ஆலையத்திற்கு அருகிலேயே மேற்படிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதீத வேகம் காரணமாகவே சிற்றூர்தி நிலை தடுமாறி வீதியோராமாக உள்ள தரவைக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்துச் சம்பவத்தில் சிற்றூர்தியின் சாரதி உட்பட 4 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவத்தில் சிற்றூர்தி பலத்த சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment