Latest News

October 29, 2013

10 நாள் தேடுதல் வேட்டை நிறுத்தம் ; தங்க புதையல் எதுவும் இல்லை ; சாமியார் கனவு வீண் போனது
by admin - 0

உ .பி., மாநிலத்தில் மன்னர் கோட்டையில் தங்க புதையல் இருப்பதாக ஒரு சாமியார் தனது கனவை வெளியிட்ட பின்னர் மத்திய அரசு இங்கு தேடுதல் வேட்டைக்கு உத்தரவிட்டது. ஆனால் கடந்த 18ம் தேதி முதல் நடந்த 10 நாள் வேட்டையில் எதுவும் சிக்காததால் இந்த தேடுதல் வேட்டையை இன்று முதல் நிறுத்த தொல்லியியல் துறை முடிவு செய்தது. சாமியார் கனவை நம்பி களம் இறங்கிய மத்திய அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கனவே எதிர்கட்சிகள் கிண்டல் செய்து வந்த இந்த சம்பவம் மேலும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம், உன்னவ் கிராமத்தில் உள்ள தாண்டியாகேரா என்ற இடத்தில், 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த மன்னர் ராவ்ராம்பக்சிங் என்பவருக்கு சொந்தமான கோட்டை உள்ளது. 

இந்த கோட்டையில், ஆயிரம் டன் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கனவு கண்டதாக சாது சோபன் சர்க்கார் என்பவர் கூறினார். இதையடுத்து, மத்திய அரசின் உத்தரவுப்படி இந்திய தொல்லியல் துறை, கோட்டையில் புதையலை தேடும் பணியில் இறங்கியது. ஆனால் இதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்ற காரணத்தினால் இதற்கு மேலும் தோண்டப்போவதில்லை என இன்று முதல் தேடும் பணியை தொல்லியல் துறை நிறுத்தியது. 

தோண்டும் பணி நடந்த போது தனக்கு மீண்டும் ஒரு கனவு வந்ததாகவும், அதில், பதேபூர் கோட்டையில், 2,500 டன் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாவும், சாது சோபன்சர்க்கார் கூறியுள்ளார். 

இந்த விவரம் தொடர்பாக அனைத்து விவரங்களையும், கோர்ட் கண்காணிக்க வேண்டும் என்ற மனுவை கடந்த வாரத்தில் சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

« PREV
NEXT »

No comments