வடக்கு மாகாணசபை தேர்தலின் போது கிளிநொச்சியில் இருந்து கொழும்பின் ஊடகஙகளுக்காக செயற்பட்ட இரண்டு தொலைக்காட்சி செய்தியாளர்கள் தமக்கு பாதுகாப்பு கோரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹிரு டிவியின் ஆனந்த பெர்ணான்டோ மற்றும் சுவர்ணவாஹினி டிவியின் சி எஸ் கொடிக்கார ஆகியோரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
தாம் வடமாகாண தேர்தலின் போது கிளிநொச்சியில் வீடு ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்து செயற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் தாம் தேர்தல் முடிந்து ஊர் திரும்பிய பின்னர் தாம் தங்கியிருந்த வீட்டின் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர், இரண்டு செய்தியாளர்களையும் வெளியில் அனுப்புமாறு சத்தமிட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண், அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு அறிவித்தமையை அடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அங்கிருந்து அகன்று வி;ட்டதாக வீட்டுக்கார பெண் தமக்கு அறிவித்தாக செய்தியாளர்கள் இருவரும் முறையிட்டுள்ளனர்.
எனவே தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இரண்டு செய்தியாளர்களும் தமது முறைப்பாட்டில் கோரியுள்ளனர்.
No comments
Post a Comment