கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய சென்ற 25 வயதான தவிஷ பீரிஸ் என்ற இந்த இளைஞர், தென் யோக்சயார் என்ற இடத்தில் தொழில் செய்துகொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2011ம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்ற தவிஷ பீரிஸ் செபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் சொப்ட்வெயார் எஞ்சினியரிங் துறையில் கல்வி கற்றுவந்தார்.
இதேவேளை தமது படிப்புக்கும் இலங்கையில் உள்ள தமது குடும்பத்துக்கும் தேவையான பணத்தை உழைப்பதற்காக பீசா உணவகம் ஒன்றில் விநியோகப் பையனாகவும் அவர் தொழில் செய்து வந்தார் என்று யோக்சயார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment