Latest News

October 20, 2013

நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் இன்று திறக்கப்படும்
by admin - 0

இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சிமையம் மற்றும் நனோ விஞ்ஞான பூங்கா இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த மையம் திறந்து வைக்கப்படும் என்றும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை நனோ தொழில்நுட்;ப நிறுவனமும்,தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து நனோ தொழில்நுட்ப சிறப்பு மையம் என்ற பெயரில் ஜூன் 2012 இல் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இப் பூங்கா ஹோமாக பிட்டிப்பனவில் 50 ஏக்கர் காணியில் 2018.5 மில்லியன் செலவில்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 1771.5 மில்லியன் ரூபாவையும் 310 மில்லியன் ரூபாவை தனியார் துறைப் பங்குதாரர்களான மாஸ், பிரன்டிக்ஸ், டயலொக், ஹேய்லிஸ், லொடிஸ்டர் மற்றும் லங்கம் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.

உலக சந்தைத் தரத்திற்கு ஏற்ப புதிய இயற்கை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராச்சி செயற்பாடுகளை விஸ்தரித்தல், உள்நாட்டு சர்வதேச பிரச்சினையான விவசாயம்இ உடல்நலம் சுகாதாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் தீர்வுகாணல், புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துதல் ஆகியனவே நனோ தொழில்நுற்ப சிறப்பு மையத்தின் நோக்கமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments