செய்துகொள்ளாத ஒன்பது உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில்
வைத்து சத்தியபிரமாணத்தை செய்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமையே இவர்கள் சத்தியிப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பதவிப்பிரமாண
நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது, கூட்டமைப்பின் 9 மாகாண சபை உறுப்பினர்
சத்தியப்பிரமாண நிகழ்வை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்
தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் முள்ளிவாய்க்காலில்
சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளாத
மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதற்கமைய 9 உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்துடன் இணைந்து இறுதியுத்தத்தில்
உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் பகுதியில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளனர். சத்தியப்பிராமாண நிகழ்வை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, யுத்திற்குப் பின்னர் மக்கள் இராணுவத்திடம் சரணடைந்த வட்டுவாகல் மற்றும் இறுதியுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்கால் ஆகிய இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டதாவும் இறுதியில் முள்ளிவாய்க்காலி;ல் பதவிப்பிரமாணம் செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் பெயர் குறிப்பிடவிரும்பாத அந்த உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment