அவிசாவளை பென்ரித் தோட்டத்தில் நீர் சுத்திகரிக்கும் குளோரின் தாங்கி வெடித்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரில் 200 பேர் வரை சிகிச்சையின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் 75 பேர் சிறுவர்கள் எனவும், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் விசேட மருத்துவர் கே.எல். எம். சஞ்சீவ தெரிவித்தார்.
மேலும் குளோரின் வாயு ஒரு விதமான விஷத்தன்மை கொண்டதெனவும் இதனால் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டமையாலேயே பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment