Latest News

September 07, 2013

இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட கையடக்க கணினியில் தமிழ் மொழிக்கும் தமிழ் ஈழத்திற்கும் அங்கீகாரம் கிடைத்தது ! (Photo)
by admin - 0


ந்த கையடக்க கணினியை கிடைக்கப் பெற்ற இங்கிலாந்து வாழ்தமிழர் மயூரதன் தன்னுடைய மொழிக்கும் தேசத்திற்கும் சர்வதேச ஆளவில் வெளியாகும் இந்த மின்னணு சாதனத்தில் இடம் கொடுத்திருப்பது தனக்கு பெருமகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
இது குறித்து மயூரதன் ஜீவன் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்.

சந்தோசமான விடயம்... நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் ஹீத்ரோவ் ( HEATHROW ) என்னும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் (UK) முதல் பிரதான விமான நிலையத்தில் பயணிகள் சேவையாளனாக பணி செய்கிறேன், எங்களுடைய பணியை இலகுவாக்கும் விதமாக எங்கள் அனைவருக்கும் tablet என சொல்லப்படும் ஒரு சிறு கையடக்க கணினி கொடுக்கப்பட்டுள்ளது, அதில் பல்வேறு மொழிகளில் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு மொழிக்கும், அம்மொழியை தேசிய மொழியாக கொண்ட நாடு அல்லது அதை பிரதானமாக பயன்படுத்தும் நாடுகளினது தேசிய கொடிகள் அடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கம் போலவே தமிழுக்கு என்ன கொடி இருக்கிறது என்று பார்க்க ஆவலோடு பக்கத்தை புரட்டினேன்... எனக்கு பதிலாக கிடைத்தது அதிர்ச்சியுடன் சேர்ந்த மன மகிழ்ச்சி...

நான் கண்டதோ புலிக்கொடி , ஆம் நம் ஈழத்தின் கொடி. இது எப்படி சாத்தியமானது என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன் . தெரிந்ததும்
தெரியப்படுத்துகிறேன். தமிழர்களால் விமான நிலையத்திலும் , பிரதான நகரங்களிலும் செய்யப்பட்ட போராட்டங்களே இதற்கு வித்திட்டிருக்கும் என்று நான் கருதுகிறேன்..

நன்றி : Mayurathan Jeevam 
 
இது போல தமிழ் ஈழத்திற்கும் தமிழ் மொழிக்கும் சர்வதேச அங்கீகாரம் கொண்ட பல கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் . தமிழக தமிழர்களும் தங்கள் அடையாளத்தை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் .
« PREV
NEXT »

No comments