Latest News

September 15, 2013

இன்னும் அடங்க வில்லை தமிழரின் மீதுள்ள பயம் அரசுக்கு – சுகிர்தன்
by admin - 0

இனப்படுகொலையில் தனது அகோர தாண்டவத்தை ஆடிய மஹிந்த அரசு…
நிராயுத பாணிகளையும் துளையிட்டு பார்த்தது அறியாமலில்லை…
இது போலவே வடமாகான சபை தேர்தலில் அதிகாரங்களை குறைத்து வைத்துள்ளது…
மீண்டும் ஒரு இன உரிமை படுகொலை செய்கிறது இந்த அரசு.. மீண்டும் இந்த தேர்தலின் மூலம் எம் மண்ணை பறிக்க முற்படும் அரசியல் சாடைக்கரர்கள். கூட்டமைப்பு பிரச்சாரங்களை முடக்கி கொண்டு இருக்கிறார்கள் இதை நிரூபிக்கும் முகமாக நேற்றைய தினம் பிரச்சாரத்துக்கு சென்ற எனது ஆதரவாளர்களை கைது செய்துள்ளனர் அரசின் வால்கள்..
தேர்தல் என்றால் எல்லா கட்சிகளும் பிரச்சாரம் செய்வது சாதாரண நிலைமையே.. அனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களின் பிரச்சாரம் மட்டுமே முடக்கி வைக்கப் பட்டுள்ளது. ஆளும் கட்சி பதாதைகள் மட்டும் தெருவுக்கு தெரு மதிலுக்கு மதில் ஓட்டுப்படும் போது.. பாதுகாப்பு படையினர் எங்கு சென்றார்கள்… தூங்கி விட்டார்களா?
அல்லது மயங்கி விட்டார்களா? தமிழர் மத்தியில் தேசிய தலைவரால் உருவாக்கப் பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உறுதியாக்கப் பட்ட நிலையில் நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் அரசு பிரச்சாரத்தை முடக்கினால் வெற்றி முடங்கி விடும் என்று கனவு காண்கிறது போல.. வட கிழக்கில் எந்த தேர்தல் வந்தாலும் ஒரு வாரத்துக்கு முதல் கிளம்பி வந்து விடுவார் மஹிந்த ஏதோ ஒரு கட்டடம் கட்டி முடிக்காமல் கிடக்கும் அதை அவசர அவசரமாக அதை செய்து முடிந்து வீதிகளை துடைத்து திறந்து விட்டு அபிவிருத்தி செய்து விட்டோம் என்று காட்ட…
தமிழர்கள் முட்டாள் களாய் இருந்தால் மிளகாய் அரைக்கலாம் என்று நினைத்து விட்டார்கள் …. எமக்கு எமது கருத்தை தெரிவிக்க சுதந்திரம் இல்லை இந்த சர்வாதிகார ஆட்சியில் மீறி தெரிவித்தால் இனந்தெரியாத நபர்களால் கொல்லப்படுவோம் நாங்கள் .. இன்னும் எத்தனை நாளைக்கு…………….
இந்த வணங்கா மண் தலை குனிய போகிறது???? சொற்ப அதிகாரமாயினும் எம் மக்களுக்கு நாமே செய்வோம்… எனது ஆதரவாளர்களின் கைது ஜீரணிக்க முடியாத ஒருபக்கச்சார்பு மட்டுமே.. நேரே மோத தைரியம் இல்லாத முள்ளதண்டிலிகள் தான் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார்கள்… அரசியல் இல்லை இது அராஜகம் மீண்டும் ஒரு போலி நியாயம்.. வீர மறவர் மக்களே உண்மை நிலையை அறிந்து கொள்ளுங்கள்.. உங்கள் அனைத்து வாக்குகளும் தமிழ் தேசியத்துக்காக மட்டுமே…
(பட்டதாரி தமிழன் சந்திரலிங்கம் சுகிர்தன் B.com தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் இல 14 )
« PREV
NEXT »

No comments