2007-ல் ஒரு படம் தயாரித்ததால் தயாரிப்பாளர் என பாலிவுட்டில் வலம் வந்த க்மால் கான் 2008-ல் ஒரு திரைப்படம் நடித்ததால் நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.அதன்பிறகு எந்த திரைப்படத்திலும் பணியாற்றவில்லை என்றாலும் இன்று வரை பாலிவுட்டின் ஏதாவது ஒரு விஷயத்தில் கமால் கானின் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கும்.
நடிகர், நடிகைகளிடம் வம்பிழுத்து சண்டையிடுவது என்றால் அவருக்கு அவ்வளவு ஆவல். இப்படிப்பட்ட கமால் கான் தற்போது வம்பிழுத்திருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை. சமீபத்தில் கமால் கான் “தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார் எல்லாம் பார்க்க அழகானவரா? அவர் எப்போதுமே பார்க்க மோசமானவர்” என்று கூறியிருக்கிறாராம்.உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகரைப் பற்றி இந்த மாதிரி கேள்வியைக் கேட்கலாமா? என்று சமூக வலைதளங்களில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் கமால் கான் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்றனர்.
No comments
Post a Comment