Latest News

September 27, 2013

துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் வடக்கு மாகாண ஆட்சி போய்சேரக்கூடாது என்பதற்காக மக்கள் வாக்களித்தார்கள் -போராளி சாள்ஸ்
by admin - 0

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கான தமிழ் மக்களின் வாக்களிப்பு என்பது தமிழீழத்துக்கான வாக்களிப்பு என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் நினைவில் வித்திருப்பார்கள்  .நடந்து முடிந்த வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு ஆமோக வெற்றி ஈட்டி இருகிறது இத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதற்காக இராணுவமும் அதன் கூலிப்படைகளும் எதிரியின் ஆளுகைக்கும், அடக்குமுறைக்கு உட்பட்ட முன்னாள் போராளிகள் போன்றவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் இருந்த போதும் தமிழீழ மக்கள் எதிரியின் நயவஞ்சக முயட்சிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் ஓயாத அலைகள் போன்று தகர்த்தெறிந்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளார்கள் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் வடக்கு மாகாண ஆட்சி போய்சேரக்கூடாது என்பதற்காகவும் தமது இனத்தை அழித்தவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பதற்காகவும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தங்கள் வாக்குகளை வாரி வழங்கினார்கள்'.எமது போராட்டத்தை அழித்து விட்டோம் என்று கொக்கரித்த சிங்களத்தின் முகத்தில் கரியை பூசினார்கள்."விடுதலையாய் ஒன்றுபட்ட எமது இனத்தை எந்த ஒரு சக்தியாலும் அழித்து விட முடியாது " என்ற தேசிய தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். 40 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாவீரர்களினதும் பல லட்சம் தமிழீழ மக்களினது கொள்கையான தமிழீழ தனியரசு கிடைத்த ஒரு அங்கீகாரமே இந்த வாக்களிப்பு இதன் அடிப்படையில் தமிழீழ தனியரசு கிடைக்கும் வரை  தொடர்ந்து போராடுவோம்
தமிழரின் தாகம் தமிழீழ தாகம்

போராளி சாள்ஸ் 
« PREV
NEXT »

No comments