சில இராஜதந்திரிகள் தன்னிடம் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி கேட்ட போது நான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 முதல் 10 ஆசனங்களை வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டுமென்று கூறிய போதிலும் எனது இந்த எதிர்பார்ப்பு தவறாக அமைந்தது. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அல்ஜெசீரா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது எமக்கு நன்கு தெரியும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டுமென்று அறிவித்திருந்தது.
எனவே, வடமாகாணத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீரான நிர்வாகத்தை நடத்த வேண்டுமென்று நான் சவால் விடுக்கிறேன்.
தனது கட்சி வடமாகாண சபைத் தேர்தலில் தோல்வியடையும் என்பதை நான் முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரிடமும் நாம் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தப் போகிறோம் என்றும் இதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றும் எமது கட்சியின் மக்கள் ஆதரவை இந்தப் பேட்டியின் போது வலியுறுத்தினேன்.
எவருக்கும் ஒரு நிர்வாகத்தைப் பற்றி குற்றம் குறை காண்பது இலகுவான விடயம். எனினும் நிர்வாகத்தை சீராக நடத்துவது கஷ்டமான விடயம். ஆகவே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபையை நிர்வகியுங்கள் என்று கூறினோம்.
சில இராஜதந்திரிகள் தன்னிடம் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி கேட்ட போது நான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 முதல் 10 ஆசனங்களை வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டுமென்று கூறிய போதிலும் எனது இந்த எதிர்பார்ப்பு தவறாக அமைந்தது. நாம் அங்கு 7 ஆசனங்களையே வெற்றி பெற்றோம் என்றும் ஜனாதிபதி இந்த தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.
நாடெங்கிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த இராணுவம் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடமாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுக்கலாகாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடெங்கிலும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இராணுவ முகாம்களை வைத்திருக்கிறது. விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கில் இருந்து இராணுவத்தை எனது அரசாங்கம் வெளியேற்றாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments
Post a Comment