பாம்புப் பெண் என்று அழைக்கப்படும் நிரோசா விமலரட்ன என்ற பெண்ணுக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாகப் பாம்பு ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிருக வதைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு நிரோசா கைது செய்யப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணைகளின் போது பாம்பு தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் வழக்கு விசாரணைகளை நடத்திய நீதிமன்றம் பாம்பைää பெண்ணிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் பாம்பை குறித்த பெண்ணிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும்ää இந்த வழக்கு விசாரணைகள் பூர்த்தியாகவில்லை.
இதேவேளைää பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாம்பு பெண் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்ததாக சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment