Latest News

September 21, 2013

தேர்தல் ஆணையாளர் அவசர வேண்டுகோள்...
by Unknown - 0

வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கு இன்று நடக்கும் தேர்தலில், வாக்காளர்கள் காலையில் நேரகாலத்துடன் சென்று வாக்களிக்கும்படி சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். “வாக்காளர் ஒருவர் யாருக்கு வாக்களிக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பது வெறும் கற்பனை. இதற்கு ஏமாற வேண்டாம்.

எந்தவிதமான அச்சமோ,சந்தேகமோ இன்றி வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிப்பது நல்லது. எனினும் பிற்பகல் 4.00 மணி வரையும் வாக்களிக்கலாம். வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்க முடியும்.

வாக்களிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை முக்கியமானது. இம்முறை தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் சிறிலங்கா இராணுவத்தினரை ஈடுபடுத்துமாறு எவரும் கேட்கவில்லை. சிறிலங்கா இராணுவத்தின் உதவியை நாம் கோரவும் இல்லை. பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தத் தடை ஏற்பட்டால், அங்கு வாக்களிப்பு ரத்துச் செய்யப்படும்.வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தாலோ, அவர்களைக் கட்டாயப்படுத்தினாலோ, அச்சுறுத்தினாலோ, அந்த நிலையத்தின் வாக்களிப்பு நிறுத்தப்படும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments