Latest News

August 06, 2013

தொடரும் வெலிவேரிய இன்னல்கள் - செய்தி வெளியிட்ட தனியார் வானொலி தயாரிப்பாளர் ஒருவர் பணிநீக்கம்!
by admin - 0

இலங்கையின் வெலிவேரிய பகுதியில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து இலங்கையின் தனியார் வானொலி ஒன்றின்  நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை அடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கலும் அமரசிங்க ஆகஸ்ட் முதல் நாள் நடந்த இந்த சம்பவம் குறித்து பத்திரிகைகள் வெளியிட்ட
செய்திகளை தனது நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கியபோது தெரிவித்த சில கருத்துக்களை அடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக்க் கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்று அவரிடம் பிபிசியின் சிங்கள  சேவையான சந்தேஷ்ய சார்பில் கேட்டபோது பதிலளித்த அவர்,
வியாழக்கிழமையன்று, ரதுபஸ்வலவில் இராணுவத் தாக்குதல் நடந்ததாக செய்திகள் வந்தன. அனேகமாக எல்லா பத்திரிகைகளும் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தன.
பத்திரிகையாளர்களை இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிடக்கூடாது என்று இராணுவ அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும் செய்திகள் வந்தன. நிறைய தகவல்கள் வந்திருந்தன.
பெண் செய்தியாளர் ஒருவர்  இராணுவக் காவலில் மாலை 8 மணி வரை வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. அவருக்கு மருந்து கூட எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த செய்தியைப் படித்த பின்னர், இந்த விஷயத்தில் பத்திரிகையாளர்கள் ஏதாவது செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டதா என்று நான் ஒரு கேள்வியை எழுப்பினேன்.
இதில் மற்றொரு செய்தி வாசிக்கப்பட்டது. அந்த செய்தியில் பாதுகாப்பு அமைச்சகம் ரதுபஸ்வலவுக்கு குடிநீர் வழங்க உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டிருந்த்து.
இந்த செய்திக்குப் பின்னர், நாட்டில் இருக்கும் ஒரே ஒரு அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகம் தானா என்று நான் கேட்டேன் என்றார்.
« PREV
NEXT »

No comments