Latest News

August 10, 2013

நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் நடுக்கடலில் கண்டனப் போராட்டம்
by admin - 0

இலங்கை கடற்படையை கண்டித்து நாகை மீனவர்கள் இன்றுபடகில் கறுப்பு கொடி கட்டி நடுக்கடலில் போராட்டம் நடத்துகின்றனர்.
நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த 65 மீனவர்கள் கடந்த 30ம் திகதி மாலை கோடியக்கரை கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த 65 மீனவர்கள் கடந்த மாதம் 26ஆம் திகதி கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகுகளை சுற்றி வளைத்து 65 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் யாழ்பாணம், திருகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி அறிந்த நாகை மற்றும் காரைக்கால் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் 64 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க கோரி இன்று கடலில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று நாகை, அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், கல்லார், பட்டினச்சேரி, நாகூர், பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை, தரங்கம்பாடி, காரைக்கால், பழையாறு, கோடியக்கரை காரைக்கால் உள்பட 64 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் திரண்டனர்.
அவர்கள் மீன்பிடிக்க செல்லும் 1500 விசைப்படகு, 500 பைபர் படகு ஆகியவற்றில் கறுப்பு கொடி கட்டினர். பின்னர் மீனவ பெண்களும், மீனவர்களும் கடலில் இறங்கி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 65 மீனவர்களை மீட்க கோரி கோஷமிட்டனர். இதையொட்டி நாகை கடற்கரையில் பாதுகாப்புக்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
10 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்லாததால் அவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

« PREV
NEXT »

No comments