காலம் காலமாக சிங்கள பேரினவாதம் திட்டமிட்டவகையில் தமிழினவழிப்பை மேற்கொள்வதே தன்னுடைய செயற்பாடாக முன்னெடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில் தமிழர்களின் உயிர் நாடியாக திகழ்கின்ற கல்வியை பாதிக்கின்ற செயற்பாடுகளையும் தமிழினத்தின் ஆணிவேராக திகழ்கின்ற தமிழர்களின் இளைய சமுதாயத்தையும் அழிக்கின்ற செயற்பாட்டில் முழுமையாக தீவிரம் காட்டி வருகின்றது.
தமிழர்களின் இளைய சமுதாயத்தை அழிக்கின்ற செயற்பாடுகளில் ஒன்றாக 14.08.2006ம் ஆண்டு அன்று செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்ற கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறையில் பங்கேற்றுக் கொண்டிருந்த மாணவிகள் மீது நடாத்தப்பட்ட படுகொலை திகழ்கின்றது. உலகுக்கு குழந்தையை அறிமுகப்படுத்துவது ஓர் தாயாக திகழ்கின்றால் அந்த தாய் தான் தனது தேசத்திற்கு ஓர் சிறந்த குடிமகனையும் குடிமகளையும் உருவாக்குனின்றார்.
ஆகையால் சிங்கள பேரினவாதம் செஞ்சொலையில் நடாத்திய படுகொலையில் நாளை மலர்கின்ற தமிழீழ மண்ணை சிறந்த வகையில் வழி நடத்தி தமிழீழ மண்ணுக்கு அறிவான இளைய சமுதாயத்தை உருவாக்க கூடிய தாய்மார்களை இழந்து எம் தேசம் தவிக்கின்றது. செஞ்சோலை வளாகத்தில் சிங்கள பேரினவாதம் நடாத்திய படுகொலையின் 7ம் ஆண்டு நினைவாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் லண்டவ் (Landau) நகரத்தில் 14.08.2013 அன்று வேற்றின மக்களையும் யேர்மன் மக்களையும் ஈர்க்கும் வகையில் துண்டுபிரசுர பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. இவ்நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் செஞ்சோலை வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலையை உள்ளடக்கிய துண்டுபிரசுரங்கள் தமிழ் இளையோர்களால் வேற்றின மக்களுக்கும் யேர்மன் மக்களுக்கும் வழங்கப்பட்டு செஞ்சோலை வளாகப் படுகொலையை பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.
வேற்றின மக்களும் யேர்மன் மக்களும் செஞ்சோலை வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலையை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்கள். இறுதியில் தமிழர்களுடைய தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

No comments
Post a Comment