Latest News

August 22, 2013

யாழ். புளியங்கூடல் மகாமாரி அம்மன் இயந்திரத் தகடு, நகை திருட்டு puliyankudal
by admin - 0


 ஊர்காவற்றுறை புளியங் கூடல் மகாமாரியம்மன் ஆலயத்தில் இயந்திரத்தகடு உட்பட பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருவதாவது, ஆலயத்தின் முன்னால் சிறிய அம்மன் கோவிலொன்றைக் கட்டுவதற்காக முன்னர் இருந்த மதில்
உடைக்கப்பட்டிருந்தது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள் அவ்
வழியே உட்புகுந்து மூலஸ்தானத்திலிருந்து அம்மன் விக்கிரகத்தைப் புரட்டிக் கீழிருந்த இயந்திரத் தகட்டையும், களஞ்சிய அறையை உடைத்து அங்கிருந்த சில்வர் பாத்திரங்களையும் எடுத்துள்ளனர். அதேபோன்று ரிக்கெட் வழங்கும் அறையை உடைத்து அங்கிருந்த நகை மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதுடன், பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments