இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார். இலங்கையில் ஒரு வாரகால சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட நவநீதம்பிள்ளை, கொழும்பில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போனவர்கள் குறித்த
இலங்கை அரசின் விசாரணைக் குழு ஏமாற்றம் தருகிறது என்றும் வடக்கு,
கிழக்கு மாகாணங்களில் இராணுவ வீரர்கள்
எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றார். போரின் போது பிடிபட்டவர்களின்
மறுவாழ்வுக்கு அரசு விரைவான
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
நவநீதம்பிள்ளை வலியுறுத்தினார். இலங்கையில் பத்திரிகையாளர்கள்
தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகி என்று தெரிவித்த அவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்த
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைப்புகளால்,
மனிதஉரிமை ஆர்வலர்கள்
துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது,
இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது மிகவும்
ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்மையைக் கண்டறியும் பயணத்தின் போது, என்னுடன் கலந்துரையாடிய
மனிதஉரிமை ஆர்வலர்கள் இலங்கைப் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால்
துன்புறுத்தலை எதிர்கொண்டது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது உயர்மட்டத்தில் உள்ளது. இதுபோன்று நடந்து கொள்வதற்கு,
என்னைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது. இதுபோன்ற கண்காணிப்பும்,
துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும்
போது, இலங்கை மோசமான நிலையில்
உள்ளது என்று தோன்றுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment