Latest News

August 11, 2013

யாழ்.நாவற்குழி சிங்கள தர்மசாலை தாக்குதல் இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்ட நாடகம்! கூட்டமைப்பு கண்டனம்!
by admin - 0

யாழ்ப்பாணம் நாவற்குழி சிங்கள மக்களின் தர்மசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது சிங்கள இராணுவத்தினரால் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என தமிழ்த் தேசியம் குற்றம்சாட்டியுள்ளது.
வடக்கில் இராணுவத்தின் இருப்பை தக்கவைப்பதற்கான ஒரு முயற்சியின் பாகம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தையும், குற்றச்சாட்டினையும் வெளியிட்டிருக்கின்றது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை வேட்பாளர்களுக்கான கருத் தரங்கத்தின் நிறைவில் மேற்படிச் செய்தியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது கட்சியின் பேச்சாளர் சுரே ஷ் பிறேமச்சந்திரன் ஊடாக வெளியிட்டுள்ளது.

மேலும் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், 

வடக்கில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்றிருக்கும் முதலாவது வன்முறைச் சம்பவம் இதுவாகவே இருக்கும். இது இராணுவ வெளியேற்றத்தைக் கோரும் தமிழ்தேசி யக் கூட்டமைப்பினதும், வெலிவேரியா சம்பவத்தின் பின்னர் இரர்ணுவத்திற்கு எதிராகத் திரும்பியிருக்கும் சிங்கள மக்களின் எதிர்ப்பை திசை திருப்பவும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. 

வடக்கு மாகாணத்தில் கடந்த 4வருடங்களில் ஒரு துப்பாக்கி வேட்டுச் சத்தம் கூட கேட்டிராத நிலையில் திடீரென சிங்கள மக்களின் தர்மசாலை மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. இது இராணுவத்தினாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஏனெனில் அவர்களிடமே ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருக்கின்றது.தமிழ ர்களிடம் இல்லை.

எனவே அரசாங்கம் ஜனநாயக முகத்துடன் காட்டுமிராண்டித்தனமான அரசாங்கம் நடத்துவதையும், இராணுவத்தைக் கொண்டு தமிழ் மக்களை அச்சுறுத்தி, அவர்களை தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிடவேண்டும். மேலும் இவ்வாறான சம்ப வங்களிற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றது என்றார்.
« PREV
NEXT »

No comments