Latest News

August 11, 2013

பிரபாகரனை பிடித்த அரசுக்கு பள்ளிகள் மீது தாக்குதல் மேற்கொள்வோரை ஏன் பிடிக்க முடியாது : முஜிபுர்
by admin - 0

பிரபாகரனை பிடிக்க முடியுமானால் ஏன் அரசாங்கத்திற்கு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்பவர்களை பிடிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கிராண்ட்பாஸ் மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீதான தாக்குதலானது முஸ்லிம்களை ஒடுக்குவதற்கான திட்டமே. தேசிய கீதத்தில் ஒற்றுமையைப் பற்றி பாடுவோர் யதார்த்தத்தில் இனவாதத்தை தூண்டுகின்றனர்.

முஸ்லிம்களை நாட்டைவிட்டு வெளியேற்றவே அரசாங்கம் எத்தனிக்கின்றது. முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்புவதன் காரணத்தினால் தான் வன்முறையை கையாளாது அமைதியாக உள்ளனர். அதை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.

« PREV
NEXT »

No comments