Latest News

August 10, 2013

பொறுமைக்கும் எல்லை உண்டு! - சோனியாவையும் மகிந்தவையும் எச்சரிக்கும் கருணாநிதி
by admin - 0

இலங்கைத் தமிழர்களிற்கு ஆதரவாக தமிழகத்தில் டெ(ல்லி)சோ(னியா) சார்பில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கருணாநிதி சோனியாவையும் மகிந்தவையும் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கை பேச்சில் அவர் உதிர்த்த வியங்களை பார்ப்போம்… 

இலங்கைத் தீவில் நடந்து முடிந்த போரில் பிரபாகரனையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் இழந்தோம். இனியாவது தமிழ் இனம் தலைதூக்க உலக நாடுகள் ஆதரவுக்கரம் நீட்ட முன்வரமாட்டார்களா என்ற எண்ணத்தோடுதான் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம்…. 
 
அப்போ ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து முன்னமே கருணாநிதிக்கு சிங்களத்திற்கு துணைநின்ற நாடுகள் தெரியப்படுத்தியுள்ளன. பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் அழித்துவிட்டு அதன் பின்னர் தமிழர்களிற்கான தீர்வு குறித்து பேசலாம் என முன்னரே கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதையே இந்த பேச்சு காட்டுகின்றது. 
 
இந்த எழுதப்படாத உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுதான் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டும் காணாமல் இருந்துள்ளார் கருணாநிதி. இந்த கேள்வி சோனியாவிடமும் கேட்கப்படுவதாக தோன்றுகின்றது. 
 
பிரபாகரனையும் அவருடைய குடும்பத்தினரையும் தலைவர்களையும் உற்றார் உறவினர்களையும் இழந்து இனியாவது நம் மீது அனுதாபம் தெரிவித்து இந்த இனத்தை தலைதூக்கிவிட மாட்டார்களா என வேண்டுவது சோனியாவை நோக்கியே. 
 
உங்கள் துணைவரின் உயிரிற்கு விலையாக பிரபாகரனையும் அவரது தாய் தந்தையரையும் குடும்பத்தினரையும் உற்றார் உறவினர்களையும் கொன்று குவித்தும் இன்னும் இரக்கம் வரவில்லையா என சோனியாவை பார்த்துதான் கருணாநிதி முதலைக்கண்ணீர் வடிக்கின்றார். 
 
இலங்கை விவகாரம் தமிழக மீனவர் விவகாரம் பற்றிக் கவலைப்படாமல் மத்திய அரசு எவ்வளவு நாளைக்குத்தான் மௌனம் காக்கப் போகின்றது? தமிழக மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கடத்தப்படுகின்றார்கள் சுடப்பட்டு கொல்லப்படுகின்றனர். இவற்றை எத்தனை நாட்களுக்குதான் தாங்கிக் கொண்டிருக்க முடியும்? பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதனை ஆணவத்துடன் அரசை நடத்துபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 
 
சொக்கத் தங்கம் சோனியாவிடம் ரொ
ம்பத்தான் கருணாநிதி நொந்துபோய்விட்டார் போல...! அதனால்தான் பொறுமைக்கும் எல்லை உண்டு என எச்சரிக்கின்றார்… ஆணவம் பிடித்த அரசு என பேசுகின்றார்… இதனை எல்லாம் நம்பிவிடாதீர்கள். நாளையே தன்னிலை விளக்கம் கொடுத்து அறிக்கை விடுத்தாலும் விடுவார். 
 
இலங்கை அரசு ஓர் ஆணவம் பிடித்த அரசாக உள்ளது. ஈழத்தமிழர்களை ஒடுக்கி அவர்கள் நல்வாழ்வை நசுக்குகிறது. இந்த எதேச்சதிகாரத்தை இலங்கை தொடர்ந்து நடத்த விரும்பினால் அவர்களை எச்சரித்து நாம் சொல்வது உங்களுக்கு இன்னும் எத்தனை தமிழர்களுடைய பிணங்கள் தேவை என்பதுதான். 
 
அய்யா கருணாநிதியாரே இதனைத்தானே செந்தமிழன் சீமான் பேசிவிட்டார் என்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறைவைத்தீர்கள் நினைவில்லையா…? நீங்கள் கூறவந்த விடையத்தின் முடிவுரையை வெளிப்படையாக பேசாமல் மனசுக்குள் வைத்திருக்கின்றீர்கள். சீமான் அதனை மேடையில் பேசிவிட்டார் அதைத்தவிர வேறு என்ன வித்தியாசம். 
 
எங்களின் உறவுகளின் உயிரை எடுக்கச் சொல்லி ராசபக்சேவிற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரத்தை யாரும் உங்களிற்கு தரவில்லையே! உங்கள் மனதில் உள்ள வக்கிரம் வெளிப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை தமிழர்களை வேண்டுமானாலும் பிணங்களாக்கு ப
வாயில்லை என ராசபக்சேவிற்கு உத்தரவிடுகின்றாரா கருணாநிதி? 
 
உங்கள் மகன் நாடாள வேண்டும். மற்ற மகன் மத்திய அமைச்சராக வேண்டும். மகள் எம்.பி.ஆக வேண்டும். பேரன்கள் மத்திய அமைச்சர்களாக வேண்டும். கொள்ளுப்பேரன்கள்.. எள்ளுப் பேரன்கள் சினிமா விளையாட்டு தொலைக்காட்சி பத்திரிகை விமான சேவை வர்த்தகம் ஏற்றுமதி இறக்குமதி … இன்னும் என்னென்ன தொழில்கள் உண்டோ அத்தனையும் ஆண்டு அனுபவிக்க வேண்டும். ஈழத்தில் உள்ள தமிழர்களும் தமிழகத்தில் உள்ள மீனவ சகோதரர்களும் மட்டும் ராசபக்சேவின் இரத்தப் பசிக்கு உணவாக வேண்டும். 
 
எந்த ஊர் நியாம் இது? உங்கள் எண்ணத்தை மேடையேற்றியதற்கு உலகத் தமிழர்கள் சார்பில் முதலில் நன்றியைத் தெரிவத்துக் கொள்கின்றோம். வேண்டும் என்றால் ஒரு பாராட்டுவிழா நடத்தி அதிலும் பேவுதற்கு வாய்புத் தருகின்றோம் இன்னும் பேச நிறைய உண்டு பேசுங்கள். 
 
உலகத் தமிழர்களை இனியும் ஏமாற்றிவிட முடியாது. தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் “தமிழினத் துரோகி” என்ற பட்டியலில் முதன்மையானவராக உங்கள் பெயர் நிச்சயம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். 
 
இந்த உத்தரவாதத்தை உலகத் தமிழர்கள் சார்பில் ஈழதேசம் இணையம் உங்களிற்கு இத்தருணத்தில் ஈழ விடுதலைப் போரில் சிங்கள இனவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட மூன்று இலட்சத்திற்கு அதிகமான தமிழர்களின் கல்லறைகள் மீது கரம்பதித்து வழங்குகின்றது. 
 
“தமிழினத் துரோகி” கருணாநிதியும் ”தமிழின அழிப்பின் ஆணிவேர்” சோனியா காந்தியும் நம்புகின்றார்கள் என்பதற்காக எம் தலைவன் வாழ்வை யாராலும் முடிக்க முடியாது. 
 
முள்ளிவாய்க்கால் களத்தில் தலைவன் நின்றது உண்மை. கடல்தாண்டி புறப்பட்டது உண்மை. காலம் வரும் அதுவரை காத்திருங்கள் உலகம் அதிர தலைவன் வரவு நிகழும். 
 
தலைவன் இருக்கின்றான் என நாம் சொல்வதன் வாயிலாக உலகத் தமிழர்கள் மூலையில் முடங்கிப் போய்விட வேண்டும் என்பதற்காக இல்லை. அப்படி ஒரு நிலை இனி வரப்போவதில்லை. தமிழர்கள் இனி அடுத்தவர் தலையில் எமக்கான விடுதலையை சுமத்தவிட்டு ஓய்ந்துவிடப் போவதுமில்லை. 
 
« PREV
NEXT »

No comments