Latest News

August 06, 2013

மத்திய அரசின் செயலால் தமிழ்நாடு தனிநாட்டு கோரிக்கையை கையில் எடுக்குமா?
by admin - 0

"தமிழ்நாட்டை அவமதிக்கும் இந்திய மத்திய அரசு தமிழர்களை இப்படி அவமதிப்பது இந்திய அரசின் பாரபட்ச செயட்பாடுகள் வெளிப்படுகின்றன. இதுபோன்ற அவமதிப்புகள் தமிழ்நாட்டை பிரிக்க இந்தியா விரும்புகிறதா என்ற கேள்வி தமிழர்கள் மனதில் வெளிப்படுவது தவிர்க்க முடியாதது இது போன்ற செயற்பாடுகளை கட்சி வேறுபாடு இன்றி எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும்." 
சரவணை மைந்தன் 

NEWS

தமிழகத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த அவமானம் என்றால், இந்திய அரசு சராசரி தமிழர்களை எப்படி மதிக்கும், ஈழ தமிழர்களை எப்படி நடத்தும் என சொல்ல வேண்டியதே இல்லை. தமிழர்களை அவமதிப்பது என்பது இந்திய அரசு அதிகாரிகளுக்கு பிடித்த ஒரு செயல்.
தமிழகத்தை ஒரு அடிமை மாநிலமாகவே இந்தியா பார்க்கிறது. திருச்சியில் வரவேற்புக்காக வந்த டி.ஜி.பி.யை சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.)
அதிகாரி தடுத்ததாகவும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்க்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ‘பெல்’ நிறுவனத்தின்
தொழிற்சாலை பிரிவை தொடக்கி வைப்பதற்காக 2–ந்தேதி திருச்சிக்கு வந்திருந்தீர்கள். தமிழக அரசின் சார்பில் உங்களை வரவேற்பதற்காக திருச்சி மாவட்ட கலெக்டரை தவிர்த்து,
நிதித்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், காதி மற்றும் கிராமத்தொழில்துறை அமைச்சர்,
தலைமைச்செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை நியமித்திருந்தேன். இந்த அதிகாரிகளுடன், நீங்கள் வந்த விமானத்துக்கு அருகே ஏணிப்படி இருந்த
பகுதியை நோக்கி நோக்கிச் டி.ஜி.பி. செல்லும்போது, சிறப்பு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த
கீழ்நிலை அதிகாரியால் அவர் மூர்க்கத்தனமாக எதிர்கொள்ளப்பட்டுள்ளார். மேலும் விமானத்தை நோக்கி செல்வதற்கும் அவரால் டி.ஜி.பி. தடுக்கப்பட்டுள்ளார். டி.ஜி.பி. தனது சீருடையில் இருந்த நிலையில்கூட இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஏணிப்படி பகுதியில் உங்களை வரவேற்பதற்காக யார் யார் வருவார்கள் என்பதற்கான பட்டியல்
உங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அந்த பட்டியல் 1–ந்தேதி உங்கள் அலுவலகத்தால்
பெறப்பட்டுவிட்டது என்று உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் டி.ஜி.பி.யின் பெயரும்
இடம்பெற்றுள்ளது. பிரதமர் வரவேற்பு மற்றும் விடையளிக்கும் நபர்களில் டி.ஜி.பி.யின் பெயர் இடம் பெற்றிருந்தாலும் கூட, அதை உங்கள் அலுவலகம் உறுதி செய்திருந்தும் கூட, டி.ஜி.பி.க்கு ஏற்பட்ட இந்த ஒழுக்கக்கேடான நிலை,
சிறப்பு பாதுகாப்புக்குழு அதிகாரிகளின் ஒழுங்கீனத்தைக் காட்டுகிறது. மாநிலத்தின் தலைமைப் பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரியான டி.ஜி.பி.யை, அதுவும் அவர் அந்த பதவிக்கான சீருடையை அணிந்திருந்த நிலையில், அவரை அடையாளம் காணமுடியாத எஸ்.பி.ஜி.யை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது அமைதியாகவும், இடையூறின்றியும் வந்து செல்லும் சூழ்நிலையை உருவாக்குவதற்கான பொறுப்பை செய்திருந்தவர் அந்த டி.ஜி.பி.தான் என்பதையும் உங்களிடம்
தெரிவிக்கிறேன். எனவே நீங்கள் இந்த விவகாரம் குறித்து விசாரித்து, அந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகள் நேராமல் இருப்பதற்குரிய ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
« PREV
NEXT »