Latest News

August 01, 2013

இலங்கை கடற்படையினரை இண்டர்போல் உதவியுடன் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்
by admin - 0

தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினரை இண்டர்போல்
உதவியுடன் கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக
நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 65
மீனவர்களை செவ்வாய்க்கிழமை இரவு சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தகவல் வந்து சேருவதற்கு முன்பாகவே கோடியக்காடு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மேலும் 74 பேரை இலங்கை கடற்படையினர்
கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையில் யாழ்ப்பாணம், திரிகோணமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் நேர் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய முதலமைச்சரோ, மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம்
பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக
கருதி திருப்தியடைந்து கொள்கிறார். மத்திய அரசோ தமிழக மீனவர்கள்
தாக்கப்படுவதை ஒரு பிரச்னையாகவே பார்ப்பதற்கு தயாராக இல்லை. தமிழக அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாகவே இப்பிரச்னைக்கு முடிவு கட்ட இயலும். இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்குவதும், கடத்துவதும் சட்ட விரோதமானவை என்பதால் இவற்றுக்கு காரணமான இலங்கைப் படையின் அதிகாரிகள் மீது தமிழக காவல்நிலையங்களில் வழக்குப்
பதிவு செய்ய வேண்டும். அதனடிப்படையில் இண்டர்போல் உதவியுடன் இலங்கைப் படையினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சிங்களப் படையினரின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதால்
அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments