Latest News

August 02, 2013

வைகோ கைது
by admin - 0

புதுக்கோட்டையை அடுத்த திருமயத்தில் பிஎச்இஎல் நிறுவனத்தின் ஒரு ஆலையைத் துவக்கி வைக்க பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை வந்தார். திருச்சி விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்றார். கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத இந்திய அரசை கண்டித்தும், மீனவர்கள் மீதான சிங்கள் கடற்படையினரின் தாக்குதலை தடுக்காததை கண்டித்தும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திருச்சி விமான நிலையத்தில் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். அதன்படி வைகோ தனது கட்சியினருடன் திருச்சி விமான நிலையத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் முன்பு கூடியிருந்தார். பிரதமர் வருகையின் போது கறுப்புக் கொடி காட்ட செல்ல முயன்றார், அவரை போலீசார் கைது செய்தனர், வைகோவுடன், பெ,மணியரசன், வேல்முருகன் உட்பட அவர்களது கட்சியினரும் கைது செய்யப்பட்டனர், விமான நிலையம் எதிரே உள்ள சாலையில் மாணவர் அமைப்பினர் கறுப்புக்கொடி காட்ட முயன்றனர், அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
« PREV
NEXT »

No comments