Latest News

August 15, 2013

கோத்தாவின் சிறப்பு புலனாய்வு லண்டனில் இறக்கம் யாழ் பல்கலை பேராசிரியர்கள் கைது செய்யப்படுவார்களா?
by admin - 0

இலங்கையில்
 இருந்து சுமார் 4 பேராசிரியர்கள் லண்டனில் நடைபெற்ற புலிகளின் கூட்டத்திற்க்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தலைமை அதிகாரிகளில் ஒருவரான ஜகத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார். பெரதேனியா , ஊவா, மற்றும் யாழ் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் சுமார் 4 பேராசிரியர்களே இவ்வாறு லண்டன் சென்றுள்ளார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அவர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு லண்டனில் நடக்கும் நாடு கடந்த அரசின் கூட்டத்திற்கு அவர்கள் சென்றுள்ளதாகவும், அவர்கள் இலங்கை திரும்பும் பட்சத்தில் அவர்களை கைதுசெய்ய தாம் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் ஜகத் நேற்று மாலை(புதன்கிழமை) தெரிவித்துள்ளார். இலங்கையில் இயங்கிவரும் ஸ்டேட் இன்டலிஜன் சேர்விஸ்(எஸ்.ஐ.எஸ்) உளவு நிறுவனமே மேற்படி சில தகவல்களை லண்டனில் திரட்டியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. ஜகத் ஜயசூர்ய மற்றும் கோட்டபாயவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் இந்த உளவு நிறுவனம், லண்டனில் தனது புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்கமைவாகவே அவர்கள் சில தகவல்களை திரட்டியுள்ளார்கள் என்பதும் மேற்படி அறியப்படுகிறது. இலங்கை அரசின் இந்தச் செயல்பாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயலாக அமையுமா என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. ஒரு நாட்டிற்குள் தமது உளவுப்பிரிவினரை அனுமதி இன்றி அனுப்புவது , பாரதூரமான குற்றச்செயலாக கருதப்படுவதோடு, சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகவும் அது அமையும்.

நன்றி அதிர்வு 
« PREV
NEXT »

No comments