Latest News

August 01, 2013

ஸ்நோடனுக்கு தஞ்சம் வழங்கியது ரஷ்யா
by admin - 0

அமெரிக்காவிலிருந்து தலைமறைவான அந்நாட்டின்
உளவுத்துறையின்
செயல்திட்டத்தை அம்பலப்படுத்தியதாக கூறப்படும் எட்வர்ட் ஸ்நோடனுக்கு ரஷ்யாவில் தஞ்சம்
கிடைத்துள்ளது. அவரது தஞ்சக் கோரிக்கைக்கான ரஷ்ய அரசின்
ஆவணங்களைப் பெற்றபிறகு,
இதுவரை மாஸ்கோ விமான நிலையத்தில்
தங்கியிருந்த ஸ்நோடன்
அங்கிருந்து வெளியேறினார். ஊடகங்களின் பார்வையில் படாமல், ஸ்நோடன்
விமான நிலயத்தின் பின்புற வாயில் வழியாக
வெளியேறிச் சென்றதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். அவர்
எவ்வளவு நாட்கள் ரஷ்யாவில் இருப்பார் என்பது குறித்தோ, எங்கு சென்றார்
என்பது குறித்தோ தகவல்களில்லை. ஆனால் அவர் பாதுகாப்பான
இடத்திற்கு செல்கிறார் என்று அவரது வழக்கறிஞர் கூறினார். முன்னாள் உளவுத்துறை கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடனின் பயண
ஆவணங்களை அமெரிக்கா ரத்து செய்ததால் இவர் கடந்த ஆறு வாரங்களாக
மாஸ்கோ விமான நிலையத்திலேயே தங்கியிருந்தார். அமெரிக்க
உளவுத்துறையின் ரகசிய
கண்காணிப்பு செயல்திட்டத்தை அம்பலப்படுத்தியமைக்காக அவர்மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அவர் அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டு வழக்கு விசாரணையில் ஆஜர்
படுத்தப்பட வேண்டும் என்று அந்நாடு விரும்புகிறது.
« PREV
NEXT »

No comments