Latest News

July 28, 2013

TNA சார்பில் தேர்தல் களமிறங்கும் மூன்று பெண் வேட்பாளர்கள்!
by admin - 0

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும், கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும், முல்லைத்தீவு  மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லை.மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர் திருமதி மேரிகமலா குணசீலனும் போட்டியிடுகின்றனர்.
இம்மூவரில் இருவர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா ஆகியோர் முன்னிலையில் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைமைச் செயலகத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். 
36 பேரைக் கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும், 3 பெண்களும் அடங்கியுள்ளனர்.
« PREV
NEXT »

No comments