Latest News

July 28, 2013

கொழும்பு துறைமுக அருகாமையில் “கடல் நகர வளாகம்” :சீனாவுடன் ஒப்பந்தம்
by admin - 0

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலை நிரப்பி ‘நகர வளாகம்’ ஒன்றை உருவாக்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
230 ஹெட்ரேயரில் நகரத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. சீன நிறுவனத்திற்கும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் இடையிலேயே இந்த ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
17,920 கோடி ரூபா செலவிலேயே இந்த நகர வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
புதிய கொழும்பு தெற்கு துறைமுகத்திற்கு அடுத்ததாக உள்ள 230 ஹெக்ரேயர் நிலப்பரப்பரப்பை துறைமுக அதிகாரசபை மீளப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியாத் பண்டு விக்ரம தெரிவித்துள்ளார்.
இலங்கை தலைநகரின் கரையோரத்தை நவீனமயப்படுத்தும் விதமாக சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனமானது [China Communications Construction Company Limited – CCCC]; ‘துறைமுக நகரம்’ ஒன்றை உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
‘நாங்கள் தற்போது துறைமுகத்திற்கு அருகிலுள்ள நிலத்தை துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கே சிறிய நகரம் ஒன்றை உருவாக்கவுள்ளோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் செப்ரெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும். புதிய துறைமுக நகரத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிலத்தை மீள உரிமையாக்கும் நடவடிக்கையானது 39 மாதங்களுக்குள் நிறைவடைந்துவிடும் என நாம் நம்புகிறோம் என்றும் அவர் சொன்னார்.
« PREV
NEXT »

No comments