Latest News

July 16, 2013

தகவல் கசிவதைத் தடுக்கும் சேப்டிகா இலங்கையில்!
by admin - 0

நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்து தகவல் கசி­வதை தடுக்கும் பொருட்டு மென்­பொ­ரு­ளொன்றை டி.சி.எஸ். லங்கா நிறு­வனம் இலங்­கையில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. சேப்­டிகா எனப்­படும் இப் புரட்­சி­கர மென்­பொ­ரு­ளா­னது தர­வுகள் கசி­வதை தடுப்­பது மட்­டு­மன்றி பல்­வேறு நன்­மை­களை அதனை உப­யோ­கிக்கும் நிறு­வ­னங்கள் மற்றும் அதன் முகா­மைத்­து­வத்­துக்கு வழங்­கு­கின்­றது.

செக்­கு­டி­ய­ரசில் உரு­வாக்­கப்­பட்ட இம்­மென்­பொரு ளானது தென் கிழக்­கா­சிய நாடுகள் பல­வற்றில் வெற்­றி­க­ர­மாக உப­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இம்­மென்­பொருள் ஊழி­யர்­களின் வினைத்­திறன் முகா­மைத்­துவம் அறிந்து கொள்ள உத­வு­வ­துடன் நிறு­வ­னங்­களில் உள்ள கணி­னி­களின் பாது­காப்­பையும் கண்­கா­ணிக்­கின்­றது.

இதன்­மூலம் நிறு­வ­னத்தில் உள்ள ஒவ்­வொரு தனித்­தனி கணி­னியும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­றது. மேலும் நிறு­வ­னத்தின் ஊழி­யர்கள் தமது தனிப்­பட்ட மின்­னஞ்சல், பென்­டிரைவ், டெப்லட் கணி­னிகள் கைய­டக்கத் தொலை­பே­சிகள் மூலம் நிறு­வ­னத்தின் தக­வல்­களை எடுத்துச் செல்­கின்­றாரா என சேப்­டிகா கண்­டு­பி­டிக்­கக்­கூ­டி­யது.

அவ்­வா­றான தரவு பரி­மாற்றம் இடம்­பெ­று­மெனின் செப்­டிகா அது தொடர்பில் நிர்­வா­கிக்கு அறி­யத்­தந்து உட­னடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வழி செய்­கின்­றது. இதன் மூலம் நிறு­வ­னங்ளின் கணி­னி­க­ளி­லி­ருந்து தர­வுகள் கசி­வது ஊடு­ருவல் செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றமை போன்­றன குறிப்­பி­டத்­தக்­க­ளவு குறைக்­கப்­படுகின்­றன.

இதன்­மூலம் சமூக வலைத்­த­ளங்கள் கேமிங் அப்­ளி­கே­ஷன்கள் ஆகி­யன முற்­றாக தடுக்­கப்­படப் போவ­தில்லை எனினும் நிர்­வா­கிகள் தமது ஊழி­யர்கள் செயற்­பாட்டைக் கட்­டுப்­ப­டுத்தும் வச­தியை சேப்­டிகா வழங்­கு­கின்­றது. இதன் மூலம் முகா­மைத்­து­வமும் ஊழி­யர்­களின் வினைத்­தி­றனை உறுதி செய்து கொள்ள முடியும்.

மனி­தத்­த­வ­றுகள் மூலம் தரவுகள் கசிவதிலிருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் ஒரே மென்பொருளாக சேப்டிகா திகழ்கின்றது. இது தவிர டிவைஸ் மேனேஜ்மன்ட் டேடா என்கிரிப்சன் எக்டிவிட்டி பிள்டரிங் புளக்கிங் போன்ற பல வசதிகளை சேப்டிகா வழங்குகின்றது.

« PREV
NEXT »

No comments