Latest News

July 14, 2013

முதன்மை வேட்பாளர் தெரிவு இழுபறியில்; மூன்று கூட்டங்கள் கடந்தும் முடிவில்லை பெரும்பாலானோர் மாவைக்கே ஆதரவு
by admin - 0

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து மோதல் இழுபறி நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவை நிறுத்த வேண்டும் என ஒருமித்த குரலில் கருத்து வெளியிட்டு வருகின்றபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ளார் எனத் தெரிய வருகிறது. இதனால் முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மூன்றரை மணி நேரம் இடம்பெற்ற கூட்டத்திலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகளினாலும் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ளவர்களில் 18 பேர் வரை வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர் அவர்கள். மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கருத்து வெளியிட்டனர். அத்துடன் கட்சி ஒன்றின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர், சுழற்சி முறையிலான முதலமைச்சர் முறைமையை ஏற்படுத்தலாம் என யோசனை முன்வைத்தார். இதேவேளை, நேற்று மாலை 4 மணிக்கு முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்யும் இறுதிக் கலந்துரையாடல் இடம்பெற ஏற்பாடாகியிருந்த போதும் பின்னர் இரத்துச் செய்யப்பட்டு, நாளை திங்கட்கிழமை அது இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments