Latest News

July 09, 2013

ததேகூ உறுப்பினர்கள் சிவசங்கர மேனனுடன் சந்திப்பு
by admin - 0

 இலங்கைக்கு விஜயம்
ஒன்றை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர
மேனனை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்,
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில்
உருவான 13வது சட்டத்திருத்தத்தை திருத்த இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சிகள்
குறித்து விவாதித்தனர். இது குறித்து தமிழோசைக்குக்
கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், இந்திய
இலங்கை ஒப்பந்தம்தான், வடக்கிலும் கிழக்கிலும்
உள்ள பிரதேசங்களை தமிழ் பேசும் மக்களின்
வரலாற்று ரீதியாக வசித்து வந்த பூமியாக அங்கீகரித்தது என்ற அடிப்படையில்,
அந்தப்பகுதியில் தற்போது இலங்கை அரசு சிங்கள
குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில்
ஈடுபட்டிருப்பதாக மேனனிடம் கூறியதாக்த்
தெரிவித்தார். எனவே இந்திய இலங்கை ஒப்ப்பந்த்த்தின்
அனைத்து அம்சங்களும் நிறைவேற்றப்படவேண்டும்,
இது போன்ற சிங்களக் குடியேற்றங்கள்
நிறுத்தப்படவேண்டும் என்று அவரிடம்
தெரிவித்த்தாக சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார். வடமாகாணத்தில் முறையான, நியாயமான தேர்தல்
நடத்துவதாக இருந்தால், வடமாகாணத்தில்
இருக்கும் ராணுவமும், ராணுவப்
புலான்ய்வுப்பிரிவும் ராணுவ முகாம்களுக்குள்
போகவேண்டும் என்ற கோரிக்கையும்
வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் தேர்தலைக் கண்காணிக்க
சர்வதேச கண்காணிப்பாளர்கள்
நிலை நிறுத்தப்படவேண்டும் ,அந்த விடயத்திலும்
இந்தியா அக்கறை காட்டவேண்டும் என்றும்
கோரிக்கை வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்தியா இந்த இரண்டு விஷயங்களிலும் தமிழ்
தேசியக்கூட்டமைப்பினரின் கோரிக்கைகளுடன்
உடன்படுவதாகவே தங்களுக்கு மேனன்
தெரிவித்ததாக சுரேஷ் பிரேமசந்திரன்
தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments