தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று நண்பகல் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றினை நடத்தியுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் காரியாலயத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், என். சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடலும் அங்கு இடம்பெற்று வருகின்றது.
No comments
Post a Comment