Latest News

July 16, 2013

சேர்பேஸின் விலையை அதிரடியாகக் குறைத்த மைக்ரோசொப்ட்!
by admin - 0


சேர்பேஸ் டெப்லட்டின் விலையை 150 அமெரிக்க டொலர்களால் குறைத்துள்ளது மைக்ரோசொப்ட்.
இதன்படி கீ போர்டாகவும் செயற்படும் கவர் அற்ற, 32 ஜி.பி. சேர்பேஸ் ஆர்டி ஒன்றின் தற்போதைய விலை 349 அமெரிக்க டொலர்களாகும். கவருடன் கூடிய டெப்லெட்டின் விலை 449 அமெரிக்க டொலர்களாகும்.

டெப்லட் சந்தையில் அண்ட்ரோய்ட் மற்றும் அப்பிளின் ஐபேட் டெப்லட்டுக்கான கேள்வி அதிகமாக உள்ளது. அண்மையில் வெளியாகியிருந்த ஆய்வொன்றின் முடிவின் படி டெப்லட் சந்தையில் 39.6 % அப்பிளுடையது. இதற்கு பின்னால் செம்சுங், எசூஸ், அமேசன் என பல நிறுவனங்கள் உள்ளன.

ஆனால் விண்டோஸ் மூலம் இயங்கும் சேர்பேஸுக்கான கேள்வி சற்று குறைவாகும். சந்தையில் வெறும் 1.5 % மைக்ரோசொப்ட் கொண்டுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டே மைக்ரோசொப்ட் அதிரடியாக விலையைக் குறைத்து கேள்வியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.

அண்ட்ரோய்ட் மற்றும் அப்பிளைப் போல அன்றி அப்ளிகேசன்கள் குறைவாக உள்ளமை விண்டோஸ் பெரிதும் வரவேற்பைப் பெறாமைக்கான காரணங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. 

« PREV
NEXT »

No comments