பிரிட்டன் பிரஜை குர்ஹம் சாக்கீ கொலை தொடர்பில் இலங்கை அமைச்சர்கள் மன்னிப்பு கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
32 வயதான குர்ஹம் சாக்கீ கடந்த 2011ம் நத்தார் பண்டிகையன்று தங்காலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் சாக்கீயின் காதலி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கை அமைச்சர்கள் மன்னிப்பு கோரியதாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் Simon Danczuk தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச உள்ளிட்ட சிலர் சம்பவத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளனர்.
முதல் தடவையாக மன்னிப்பு கோரப்பட்டுள்ளதாகவும் இதனை வரவேற்பதாகவும் Simon Danczuk தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment