Latest News

July 16, 2013

நீரில்லாமல் தாவரங்கள் இனி சாகாது!
by admin - 1


நீரில்லாத வறட்சியான பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு புதிய கண்டுபிடிப்பொன்றினை மெக்சிகோவைச் சேர்ந்த இரசாயனவியலாளராருவர் மேற்கொண்டுள்ளார். அவரது கண்டுபிடிப்பு என்னவெனில் நீரை உறிஞ்சு சேமித்து வைப்பதன் மூலம் அதனை எதிர்காலத்தேவைக்கு உபயோகப்படுத்தலாகும்.

நீரை உறிஞ்சி சேமித்து வைக்கும் பொருட்டு "சொலிட் ரெய்ன்" எனும் சீனியைப் போன்ற தூள் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது பொட்டாசியம் பொலியகிரைலேட் எனும் மூலப் பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த தூளானது அதன் உருவத்தைப் போல 500 மடங்கு அளவு நீரை உறிஞ்சி  வைத்துக்கொள்ளக்கூடியது.


மேலும் 10 கிராம் 'சொலிட் ரெய்ன்' தூள்கள் 1 லீட்டர் நீரினை ஜெல்லாக மாற்றி தம்முள் சேமித்துவைக்கும் திறன் படைத்தன. சுமார் 1 வருட காலத்திற்கு ஆவியாகாமல் அந்நீரை 'சொலிட் ரெய்ன்' தூள்கள் சேமித்து தனக்குள் வைக்கக்கூடியது. பின்னர் இதனை மண்ணுக்குள் போடுவதன் மூலம் தாவரங்களின் வேர்களால் அந்நீர் உறிஞ்சப்படும். இது தாவரங்கள் செழிப்பாக வளர வழிசெய்கின்றது.

இப்புதிய கண்டுபிடிப்பானது வறட்சியால்  விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைவதை பெரிதும் குறைக்குமென இதனை உருவாக்கிய மெக்சிகோ இரசாயனவியலாளரான சேர்ஜியோ ஜீசஸ் ரிகோ வெலஸ்கோ தெரிவிக்கின்றார்.


« PREV
NEXT »

1 comment

Anonymous said...

Wow nice kaaveeri thanni thevaiyillai