Latest News

July 23, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களுக்களுக்காக தனியான ஒரு ஆட்சியை நடத்தும் நிலைப்பாட்டில்-பிரித்தானியா
by admin - 0

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், பிரிட்டிஸ்
உயர் ஸ்தானிகராலயத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிறீதரன் ஆகியோர்  கலந்து கொண்டனர். இலங்கையின் வடபகுதியில், போருக்கு பின்னரான காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை மற்றும் வாழ்வாதார
நிலைமைகள், மாகாண சபைத் தேர்தல்கள்
ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். பல பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து மக்களின்
காணிகளை ஆக்கிரமித்துள்ளதாவும், இதன்
காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சொந்த
இடங்களில் மீள்குடியேற முடியாத ஒரு சூழல் உள்ளது என்றும் தமது தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அவர்
குறிப்பிட்டார். வடமாகாண சபைத் தேர்தலின் மூலமாக, தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினர்
தமிழர்களுக்களுக்காக தனியான
ஒரு ஆட்சியை நடத்தும் நிலைப்பாட்டில்
இருப்பதாக பிரிட்டிஷ் தரப்பினருக்கு சிலர்
கூறியதாகவும், அது குறித்தும் விவாதம் இடம்பெற்றதாக தெரிவித்த நாடாளுமன்ற
உறுப்பினர் சிறீதரன், இந்தியா மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ள
சமஷ்டி முறையை ஒத்த, சுயநிர்ணய
உரிமையுடன் கூடிய ஆட்சி மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தையே தாங்கள் விரும்புவதாகவும் அவர்களுக்கு இது பற்றி தெரிவித்ததாக கூறினார்.
« PREV
NEXT »

No comments