Latest News

July 24, 2013

தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி இலங்கையில் பாதுகாப்பின்மையே காரணம்
by admin - 0

தமிழ்நாட்டில் முகாம்களிலும், வெளியிலும் வசித்து வரும், இலங்கைத் தமிழர்கள்,
தாயகம் திரும்பும் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், இலங்கையை விட, தமிழ் நாடு பாதுகாப்பானது என்று அவர்கள் உணர்வதே, அதற்குக் காரணம் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்திய அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் உள்ள, 102 அகதி முகாம்களில், 60, 725 இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில், நிதியுதவியும், அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படுகின்றன. முகாம்களுக்கு வெளியிலும், பல ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த, 10 ஆண்டுகளில், இலங்கையில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த 2004ஆம் ஆண்டு காலப் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக, 3,078 பேர் தாயகம் திரும்பிச் சென்றனர். அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில், இறுதிப்போர் தொடங்கிய போது, தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2007இல் யாருமே இலங் கைக்குத் திரும்பிச் செல்ல வில்லை. 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், மீண்டும் தாயகம் திரும்பு வோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அடுத் தடுத்த ஆண்டுகளில், உச்சத்துக்கு சென்ற இந்த எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இது குறித்து, தமிழ்நாடு அரச அதிகாரிகள் கூறுகையில், இறுதிப் போருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்தவர்களே, போர் முடிந்த பின், சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கின்றனர். தற்போதுள்ள இளைய தலை முறையினர் யாரும், இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதில்லை. காரணம், இலங்கையை விட, தமிழ் நாடே தமக்குப் பாதுகாப் பானது; உறவானது என்று நினைக்கின்றனர். முகாம்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கானவர்களில், பெரும்பாலான இளைஞர்கள், தமிழ்நாட்டுக்கு வந்த பின்னரே பிறந்தவர்கள். எனவே அவர்கள், இலங்கை செல்வதைவிட, தமிழ்நாட்டில் இருக்கவே விரும்புகின்றனர். அதுமட்டுமின்றி, போருக்குப் பின்னர், தமிழர்களின் குடியிருப்புகளில், சிங்களக் குடியிருப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. எனவே, அங்கு செல்வதைப் பாதுகாப்பு குறைவானதாக நினைக்கின்றனர். எனவே, தாயகம் திரும்புகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எதிர்வரும் காலங்களில், இன்னும் குறையலாம் என்றனர்.
« PREV
NEXT »

No comments