வன இலாகாவுக்குச் சொந்தமான காணிகளை அளந்து எல்லை போடுதல் என்ற பெயரில் வன்னியில் பொதுமக்களின் பெருந்தொகையான காணி திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
படையினருக்கான காணி அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம் என்பவற்றுக்கு மேலாக வன இலாகாவுக்குச் சொந்தமான காணி எனக் கூறப்பட்டு பெருமளவு காணி பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வன்னியில் பல பகுதிகளிலும் வன இலாகாவுக்குச் சொந்தமான காணிகள் அளக்கப்பட்டு அவற்றுக்கான எல்லைகளைப்போடும் நடவடிக்கைகள் வன இலாகா அதிகாரிகளால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது இப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் மக்களுடைய காணிகளும் வன இலாகாவுக்குச் சொந்தமான காணிகள் எனக் கூறப்பட்டு அபகரிக்கப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையடுத்து வன இலாகா அதிகாரிகளுடன் தான் தொடர்புகொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட காணி உரிமை யாளர்கள் அவை தம்முடையவை என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்களைக் கொண்டுவர வேண்டும் எனப் பதிலளிக்கப்பட்டதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
ஆனால், கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போரினால் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்த மக்களின் காணி உறுதிகள் காணாமல் போய்விட்டதாக சிவசக்தி ஆனந்தன் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை.
இது தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்ததாவது:
வனஇலாகா அதிகாரிகள் இலாகாவுக்குச் சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி அதன் எல்லைகளைக் குறிக்கும் வகையில் தூண்களை அமைத்து வருகின்றார்கள். இவ்வாறு எல்லைகளை அமைக்கும் போது பொதுமக்களுடைய காணிகள் பலவற்றையும் உள்ளடக்குகின்றார்கள்.
வன இலாகா அதிகாரிகள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை காரணமாக மேட்டுக் காணிகள் மற்றும் வயல் காணிகளும் கொண்டுள்ளவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்த போது, உங்கள் காணிக்கான அத்தாட்சியைக் கொண்டுவருமாறு வனஇலாகா அதிகாரிகள் கேட்கின்றார்கள்.
ஆனால், 30 வருடகாலமாக இடம்பெற்ற போர் மற்றும் இடப்பெயர்வுகளின்போது இந்த மக்கள் தமது காணி அனுமதிப் பத்திரங்களை இழந்துவிட்டார்கள். இதனை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
மேலும், நீண்டகாலமாக புதிதாக காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படாததோடு, இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக வாழ்வோரது காணிகளும் இவ்வகையில் அடங்குவதாகவும் இந்த நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களுடைய காணிகளை சட்டரீதியாக அபகரிப்பதை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் செயற்படுவதாகத் தோன்றுகின்றது.
இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள- முஸ்லிம் குடியேற்றங்கள் என்பவற்றுக்கு மேலாக தமிழர்களுடைய காணிகளை அபகரிப்பதற்காக அரசாங்கம் வகுத்துள்ள ஒரு உபாயமாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது.
அண்மையில் வேலங்குளம், பூவரசங்குளம், உசன் புளியங்குளம் போன்ற பல இடங்களில் இவ்வாறு மக்களுடைய காணிகள் பெருமளவுக்கு அபகரிக்கப்பட்டுள்ளன. வன இலாகா அதிகாரிகள் இராணுவத்தினருடன் வந்தே இந்தக் காணிகளை அபகரிக்கின்றார்கள்.
இப்பகுதிகளில் நான்கு ஐந்து தலைமுறைகளாக இம்மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். போரால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்துள்ள மக்களின் ஒரே சொத்தாகவுள்ள அவர்களுடைய காணிகளையும் பிடுங்கிக்கொள்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இவ்விடயத்தில் அரசாங்கம் தடுத்து நெறுத்து முன்வர வேண்டும் எனறு சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.ஆதாரங்கள் உண்டு விரைவில் வெளியிடப்படும்.நிச்சயமாக இதற்கு இலங்கை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் போன்ற பெரிய புள்ளிகள் சம்மந்தம் உண்டு வெளிநாட்டு நிதியை கொள்ளை அடித்து தமிழர் நிலங்களை அபகரிக்க மிகவும் சாதூரியமாக நடவடிக்கை மேற்கொள்ளும் நபர்கள்< நிறுவனம்> ஈடுபடுகிறது .தட்டி கேட்டவர்களை பயமுறுத்தியதும் உண்டு அவர்களை துன்பத்துக்களாக்கியதும் வெளிவராத? வெளிவரும் ஒரு தகவல்.ஆதாரங்கள் உண்டு விரைவில் வெளியிடப்படும்.இந்த விடயம் ஏற்கனவே நெடுங்கேணி பிரதேச செயலாளருக்கு தெரியுமே கேட்டு பாருங்கள்...... அனைத்தும் விரைவில்

No comments
Post a Comment