Latest News

July 29, 2013

60 வயதிற்கும் கூடிய கைதிகளுக்கு மன்னிப்பு!
by admin - 0

சிறையில் 10 வருடங்களுக்கு மேலாக இருக்கும் 60 வயதிற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பளித்து அவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் சிறைகள் சீர்திருத்த அமைச்சு ஆலோசித்து வருகின்றது.

இந்த வயதிக்குள் அடங்கும் கைதிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருந்தார்.
கைதிகளில் பலர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவ கவனிப்பு தேவையானவர்களாக உள்ளனர் என்பது தொடர்பில் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 60 வயதுக்கும் மேலிருந்தால் அவ்வாறானவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மன்னிப்பு அளிக்கப்படமாட்டது என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தனர்.
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளினால் சிறையில் பல நோய்கள் பரவுகின்றன. நாம் இதை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளோம் என அவர் கூறினார்.
மன்னிப்பு அளிக்கப்படுவதற்காக இனம் காணப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படின் குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலைமையில் இல்லையென அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments