Latest News

July 06, 2013

உதைபந்தாட்டம் தமிழீழம் 5 - சீலாந்து 3 க்கு என்ற இலக்குடன் வெற்றி
by admin - 0

ஐக்கிய நாடுகள் சபையினால அங்கீகரிக்கபடதா நாடுகளுக்கான
சர்வேதச கால்பந்து போட்டி இன்று  Isle of Man இல்  வெற்றிகரமாக
தொடங்கியது. குழு A 4 July 2013 19:30 Sealand V Tamileelam FA 5 July 2013 19:30 Occitania V Sealand 6 July 2013 19:00 Tamileelam FA V Occitania குழு B 4 July 2013 14:30 St John’s UTD V Raetia 5 July 2013 15:00 Alderney V St John’s UTD 6 July 2013 14:00 Raetia V Alderney முதல் ஆட்டத்தில் குழு B  இல் இருந்து St John’s UTD அணியும் Raetia
அணியினரும் மோதினர். St John’s UTD  அணியினர் ஆட்டம் முழுவதும்
மேலோங்கி இருந்தனர். Raetia அணியனர் தங்களின் முழு பலத்துடன் போராடியும்
இறுதியில் தோற்கடிக்கப்பட்டனர். St John’s தலா 3 goal
களை தமதாக்கி போட்டியை வென்றது இன்று மாலை எமது தமிழீழ அணி Sealand அணியுடன்
மோதி இந்தபோட்டியை தொடங்கினார்கள் போட்டியில் பங்கு பெற்றியவர்களின் விபரம் பின்வருமாறு. உமேஷ் சுந்தரலிங்கம் (பந்து காப்பாளன் ) 1 சிவரூபன் சத்தியமூர்த்தி (தடுப்பாளன் ) 5 கெவின் நாகேந்திரா (தடுப்பாளன் ) 18 அருண் விக்னேஸ்வராஜா (தடுப்பாளன் ) 6 மதன்ராஜ் உதயணன் (மத்திய விளையாட்டுனர் ) 14 கஜேந்திரன் பாலமுரளி (மத்திய விளையாட்டுனர் ) 15 மஹி நம்பியார் (மத்திய விளையாட்டுனர் ) 10 ரொன்சன் வல்லிபுரம் (மத்திய விளையாட்டுனர் ) 12 பிரஷாந்த் ராகவன் (எல்லை விளையாட்டுனர்) 20 (துணை அணித்தலைவர் )  கவிந்தன் நவநீதகிருஷ்ணன் (எல்லை விளையாட்டுனர்) 9 மஜூரன் ஜெகநாதன் (முன்னேறி விளையாட்டுனர்) 7 அணித்தலைவர் பனுஷந்த் குலேந்திரன் (முன்னேறி விளையாட்டுனர்) 8 ஷாசில்  நியாஸ் (முன்னேறி விளையாட்டுனர்) 4 மக்கள் நினைத்ததை விட எமது அணியினர் மிக உற்சாகமாக
தமது திறமையை வெளிக்காட்டி உள்ளனர். அவர்களின் விளையாட்டு திறமை Isle of
Man மக்களும் மற்றும் அனைத்து ரசிகர்களும் மெச்சும் வகையில்
போட்டி விதிமுறைகளை மீளாது மிகவும்  கண்ணியமாக
விளையாட்டை கையாண்டனர். இவர்களின் மிரட்டலான பந்து ஆளுமையால் எதிர் அணியினர் திக்குமுக்காடி போனதை கண்டு எமது ரசிகர்கள் பரவசம் அடைந்த காட்சிகள்
ஏராளம். போட்டி அரை சுற்றில் தமிழ் ஈழ அணி 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் SeaLand
அணியினர் 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் கொண்டு இருந்தனர் . போட்டி இறுதியில் SeaLand அணியினர் 3 உதைபந்தாட்ட இலக்குகளையும் தமிழ்
ஈழ அணியினர் 5 உதைபந்தாட்ட இலக்குகளையும் எடுத்து இந்த
போட்டியை வெற்றிகொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி  உள்ளனர் உதைபந்தாட்ட இலக்கு அடித்த தமிழீழ அணி வீரர்களின் விபரம் வருமாறு பனுஷந்த் 2 உதைபந்தாட்ட இலக்கு களையும் (முதலாவது, இரண்டாவது) மஜூரன் 3வது உதைபந்தாட்ட இலக்கையும் மதன்ராஜ் 4வது உதைபந்தாட்ட இலக்கையும் பிரஷாந்த் 5வது உதைபந்தாட்ட இலக்கையும்  கைப்பற்றி கொண்டனர். எமது அணியின் விளையாட்டு திறனை கண்ட மற்ற அணியினர்
எமது அணி வீரர்களை பாரட்டியும் இனி வரும் போட்டிகளில் எமது அணி மிக
பெரிய சவாலாக அமையும் என்று கூறி உள்ளனர். திரு. Malcom Blackburn, இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மெச்சி சொன்னவார்தைகள் இங்கே "இது வரை நான் இங்கு பார்த்த விளையாட்டு எல்லாவற்றிலும் இன்று தமிழ் ஈழ அணியின் விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்தது"
என்று தெரிவித்தார்.


« PREV
NEXT »

No comments