Latest News

July 21, 2013

சிறீ ரெலோ மற்றும் பல அரச துணைக்குழுக்களின் ஆசீர்வாதத்துடன் 41-வது இலக்கிய சந்திப்பு - தேவைதானா???????
by admin - 0


புலம்பெயர் இலக்கிய ஆர்வலர்கள் பங்கெடுக்கும் இலக்கிய சந்திப்பின் 41-வது அமர்வு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடந்துவருகிறது.இதுவரை காலமும் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்றுவந்த இந்த இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்தக்கூடாது என்று அதன் ஏற்பாட்டாளர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வு ஜூலை 20-ம் திகதி தொடங்கியது.

இதே வேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 41 வது இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்வில் சிறீ ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் பிரதான ஏற்பாட்டாளர்கள் எனவும் தெரியவருகிறது. இலங்கை அரச ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள பல அரச துணைக்குழு உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.

இலங்கை மீது சர்வதேச தலையீடு அதிகரித்துள்ள நிலையில் பொது நலவாய மகாநாடும் பாரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் யுத்த காலங்களில் வெளிநாடுகளில் வருடா வருடம் நடத்திய இலக்கியச் சந்திப்புக்கள் சமதளத்தில் இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதன் அர்த்தம் என்ன? யுத்தமற்ற நிலை மற்றும் இங்கு அமைதி சகலருக்கும் பாதுகாப்பு என்பதாய் பொருள்படும் அல்லவா??

பல இலட்சம் மக்கள் அழிக்கப்பட்டு, வாழும் இடமே தெரியாமல் தமிழர்கள் ஊசலாடும் நிலையில் இலக்கிய மகாநாட்டால் எதை சாதிக்கலாம்? ஒரு இனம் வாழ்ந்தால் தான் அதற்கு ஒரு இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் இருக்கும். இதை விடுத்து நாளுக்கு நாள் அரச ஆட்சியாளர்களும் ஒட்டுக்குழுக்களும் நில ஆக்கிரமிப்பு, அளவுக்கதிகமான இராணுவ பிரசன்னம் இன்னும் பல சகிக்கமுடியா அடக்கு முறைக்குள் தமிழ் இனம் தள்ளாடி, தடுமாறும் நிலையில் இலக்கிய விழா தேவைதானா???????

எத்தனை தமிழ் குடும்பங்கள் யுத்தத்தின் வடுக்கள் ஆறாமல் உண்பதற்கு உணவுமில்லை, உறங்குவதற்கு வீடும் இல்லை, குழந்தைக்கு பாலும் இல்லை, மகளுக்கு மணம் முடித்துக் கொடுக்க பணமுமில்லை, என அல்லுறும் நிலையில் சங்கத்தமிழ் இலக்கியத்தின் பெயரால் இவர்கள் வாழ்வில் ஏதாவது செய்திருந்தால் நல்லது. அதை விடுத்து விழா எடுத்து யுத்தக் குற்றவாளிகளை நிரபராதியாக்க தமிழ் இனத்தின் ஒருசாரார் முனைவது மனதிற்கு கசப்பாய் உள்ளது.

நேற்றய தினம் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்த ஒருசிலர் 200 க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள் நீண்ட நாளைக்குப் பிற்பாடு முஸ்லிம் சகோதரர்ககும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்துள்ளார்கள் என வரிக்கு வரி புகழ்ந்து தள்ளியுள்ளார்கள். நல்லது. சரி.இவ் இலக்கிய விழாவில் தமிழ் பேசும் சமூகத்திற்காய் என்ன சாதிக்கப் போகிரார்கள்? ஒன்றும் இல்லை. சிறீ ரெலோ உதயராசாவின் விருந்தும், மகிந்தவின் மருந்தும் ஏற்பாட்டாளர்களை மகிழ்விக்கும் இதை விட என்ன சுகம் இவர்கட்கு…………?

இவ்வாறு அளவுக்கதிகமாய் இலங்கையில் நடந்த அநீதிக்கு பாதுகாப்பு தேட சில தமிழர்(?)தரப்புக்கள் முனையுமாக இருந்தால் இதன் விளைவு பன் மடங்காகும் என்பதுடன் அடுத்த வருட இலக்கிய மகாநாடு அம்பாந்தோட்டையில் நடப்பது மட்டும் உறுதி.
« PREV
NEXT »

No comments