Latest News

July 29, 2013

13வது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் - ஜப்பானிய அமைச்சர் யோஷிதகா ஷின்டோ வலியுறுத்தல்
by admin - 0

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய உள்துறை மற்றும் தொடர்பாடல் துறை அமைச்சர் யோஷிதகா ஷின்டோ இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபகசவை சந்தித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இருவரும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.
அத்துடன் தொடர்பாடல் துறை மற்றும் பொருளாதார துறைகளில் மேலும் அதிகரிக்கும் வழிகள் பற்றியும் இருவரும் கருத்துக்களை பரிமாறி கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, இலங்கையிடம் இருந்து கிடைத்த ஒத்துழைப்புகளை நினைவுகூர்ந்த ஜப்பானிய அமைச்சர், ஜப்பான் மக்கள் அதனை பாராட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
அதேவேளை ஜப்பானிய அமைச்சர், இன்று இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவை அவரது அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
13வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும்
13வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும் என ஜப்பானின் உள்நாட்டு அலுவல்கள், தொடர்பாடல் அமைச்சர் யோஷிதகா ஷின்டோ தெரிவித்தார்.
இது ஒரு நாட்டின் அரசியலமைப்பில் உள்ள விடயமாகும். இதனால் குறித்த நாடே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கலந்துரையாடல்கள் அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இடம்பெற வேண்டும் என ஜப்பானிய அமைச்சர் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் உள்நாட்டு அலுவல்கள், தொடர்பாடல் அமைச்சர் யோஷிதகா ஷின்டோ கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதன்போது 13வது திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளரொருவர் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஜப்பானிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை மேம்படுத்துவதே எனது விஜயத்தின் பிரதான நோக்கமாகும். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் பேச்சு நடத்தியுள்ளேன்.
மிக விரைவில் இது தொடர்பான ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. எனினும் இதற்காக ஒதுக்கப்படவுள்ள நிதி, இதுவரைக்கும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த உதவிகள் கல்வி, நிதி, மேம்படுத்தல் என பல வகையில் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் பொருளாதார தொடர்புகளை மேலும் வளர்ப்பதற்கு இலங்கையும் ஜப்பானும் கவனம் செலுத்துகின்றன' என்றார்.

« PREV
NEXT »

No comments