Latest News

June 17, 2013

மட்டு. புனானையில் விநாயகர் ஆலயத்தை மறைத்து அமைத்துள்ள விகாரை-ஆதாரம் இணைப்பு
by admin - 0

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனானை புகையிரத நிலைய முன்பாக உள்ள விநாயகர் ஆலயத்திற்கருகில் மறைத்த பிரமாண்டமான விகாரை ஒன்றை பௌத்த பிக்கு உருவாக்கி இருக்கின்றார். அந்த ஆலயத்தினை  பாராளுமன்ற உறுபபினர் சீ.யோகேஸ்வரன் கடந்த சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
விநாயகர் ஆலயத்தை மறைத்தே இவ்விகாரையை கட்டியுள்ளனர். அத்தோடு பின்புறமாக 15 வீடுகள் கட்டப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றுள்ளது.
புனானையில் 1988க்கு முன் ஐந்து சிங்கள குடும்பங்களே இருந்தன. இவர்கள் யுத்தப் பயத்தினால் தாங்களாகவே இடம்பெயர்ந்து கடவத்தை என்னும் அருகில் உள்ள சிங்கள பகுதிக்கு சென்று காணி, வீடு என்பவற்றை அரசாங்கத்திலிருந்து பெற்றதுடன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக அரச நிவாரணமும் பெற்று வாழ்கின்றனர்.
இவர்களில் இரு குடும்பம் தாங்கள் குடியிருந்த காணியினை விற்று விட்டு சென்றுள்ளது.
அத்தோடு புனானை கிழக்கில் நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழைச்சேனை உட்பட்ட கிராமங்களில் சில மக்கள் வாழ்கின்றனர்.







« PREV
NEXT »

No comments