Latest News

June 23, 2013

தமிழர் ஸ்ரீலங்காவின் மக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிரித்தானிய போராட்ட நிகழ்வின் பக்கங்கள்
by admin - 0

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறிலங்காவை புறக்கணிக்க கோரி, லண்டன் ஓவல் மைதானத்திற்கு அருகில் அமைதி வழி போராட்டம் நடத்தினர்.
இதன்போது சிறீலங்கா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியைக் காண வந்த சிங்களவர்கள், தமிழர்கள் செய்யும் பிரச்சாரத்தை காணச் சகித்துக்கொள்ள முடியாமல் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள்.

இதில் பெண்கள் என்றும் பாராமல் எட்டி உதைத்தும் தாகத வார்த்தைகளால் திட்டியும், மிகவும் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள்.

அதற்கு பதிலடியாக கடந்த 20ம் திகதி இந்திய – சிறிலங்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, கார்டிப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள் பலத்த போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தார்கள்.

அப்போது பெரும் சினம் கொண்ட தமிழர்கள் சிலர் விளையாட்டு மைதானத்திற்கு உள்ளும் தமிழீழக் தேசிய கொடியை ஏந்தியும், சிறீலங்கா அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் உயர்த்திக் காட்டியவாறு போராட்டங்களில் ஈடுபட்டதுடன், மைதானத்திற்குள் உள்நுழைந்து தமது உச்ச எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

அதன்பின்பு விளையாட்டு போட்டி நிறைவடைந்த போது வெளியே வந்த சிங்களவர்கள் தமிழர்களை கோபம் கொள்ளச் செய்யும் சைகைகளை காட்டியவாறு வெளியேறினார்கள்.ஏற்கனவே சினத்துடன் அமைதியாக போராட்டத்தில் இருந்த தமிழர்கள் இவர்களின் செயல்களைக் கண்டதும் கோபமுற்று சிங்களவர்களுக்கு பாடம் புகட்டி அனுப்பினார்கள்.

போராட்டம் நடைபெறும் போதே சிறீலங்கா அரசு அதிகாரிகள் காவல்த்துறைக்கு தமிழர்களின் போராட்டத்திற்கு இடம் வழங்க கூடாது என கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

அத்துடன் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து அவ்வப்போது அங்கு நடக்கும் சம்பவங்களை பிரித்தானிய காவல்த்துறைக்கு அறிவித்து போராட்டத்தை தடுக்குமாறு கேட்டிருந்தார்கள். ஆனால் இது அமைதியான போராட்டம் இதை தடுக்க முடியாது என திட்டவட்டமாக காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

அதன் பிறகு சிறீலங்கா அரசு அங்கு உள்ள பிரித்தானியா தூதரகத்திற்கு சிங்கள மக்களையும் விளையாட்டு வீரர்களையும் பாதுகாக்குமாறு கண்டிப்புடன் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.

தமிழர்கள் தாக்கப்பட்டபோது விடுக்காத வேண்டுகோளை சிங்களவர்கள் மட்டும் தாக்கப்படும் போது பலமுறை தொடர்புகொண்டு விசாரித்ததோடு, கண்டனமும் வெளியிட்டுள்ளார்கள்.

இதன் மூலம் தாம் ஒன்றை உணர்ந்திருப்பதாக சில பிரித்தானிய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

அதாவது தமிழர்கள் வேறு சிங்களவர்கள் வேறு என்பதை சிறீலங்கா அரசே உறுதிப்படுத்தியுள்ளது என்பதை பிரித்தானிய காவல்துறை மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் உணர்ந்து கொள்வார்கள் என்பது உண்மை.
« PREV
NEXT »

No comments