Latest News

June 26, 2013

உத்தராகண்ட் நடந்தது என்ன?இலங்கைக்கு வழங்கிய ராடார் காரணமா?
by admin - 2

இந்திய அரசு இலங்கைக்கு ராடார் வசதிகளை ஈழ போர் நான்கில் வழங்கியது இதில் இலங்கை இராணுவம் பல வழிகளில் வெற்றி கொள்ள வசதி கிடைத்து இதனால் கண்காணித்துதான் தமிழர்களை கொன்று சிங்கள அரசு வெற்றி வாகை சூடியது.இந்திய அரசோ தனது மக்களையும் பாதுகாக்கவில்லை தமிழீழ மக்களையும் அழித்தது. மேற்கொண்டு வாசியுங்கள் உங்களுக்கே புரியும் நன்றி புதியதலை முறை 

சரவணை மைந்தன் 

கேதார்நாத், இந்த இடத்தின் பெயரை இனிமேல் கேட்கும் போது சிவன் மட்டுமல்ல அண்மையில் நிகழ்ந்த மிகப்பெரிய இயற்கைச் சீற்றமும் அது ஏற்படுத்திய பேரழிவும் நினைவுக்கு வந்து நம்மை வாட்டும். 
உத்தரகாண்ட் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இயற்கை எழில் கொஞ்ச, புனித யாத்ரீகர்களின் சிவசிவ உச்சரிப்பகளும், சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பும் நிறைந்த இடமுமாக இருந்த கேதார்நாத்தில் அன்றைய தினம் விடாத அடை மழை பெய்யத் துவங்கியது.
கேதார்நாத் வாசிகளோ இது இந்த சீசனில் பெய்யும் வழக்கமான மழை என்று தான் நினைத்திருந்தார்கள்...சுற்றுலா வந்தவர்களும், யாத்ரீகர்களும் மழை அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் அடுத்த சில மணி நேரங்களில் கேதார்நாத் மிகப்பெரிய இயற்கைச் சீற்றத்திற்கு ஆளாக இருக்கிறது என்பதை. உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய விபத்தாக கருதப்படுகிறது.
விடாத மழை, காட்டாறாக ஓடிய வெள்ளம், விளைவு மிகப்பெரிய நிலச்சரிவு. நிலச்சரிவில் பிரமாண்டமான ரிசார்ட்டுகள், கட்டடங்கள் பல சீட்டுக்கட்டு சரிவது போல் சரிந்தன. ஊடகங்களில் வெளியான இந்தக் காட்சி பார்ப்போரை உறையவைத்தது என்பது உண்மையே. புனிதப் பயணத்திற்குச் சென்ற தங்கள் உறவினர்கள் நிலை என்னவாயிற்றோ என்ற சோகத்தில் ஆழ்ந்தனர் குடும்பத்தினர்.
ஓரிரு நாட்களில் கேதார்நாத் முழுமையாக துண்டிக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். மாநில தலைமை அதிர்ந்து போனது. உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. உடனடியாக உதவிக்கரம் நீட்டிய ராணுவம் களத்தில் இறங்கியது. ஹெலிகாப்டர்கள் உதவியுடன் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த 8500 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியை முடுக்கி விட்டனர். அவர்களுக்குத் துணையாக இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 45 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய விமானப் படை வரலாற்றிலேயே, அதிக மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக கருதப்படும் இந்தப் பணிக்கு ஆபரேஷன் ராஹத் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 7 மணியளவில் கேதார்நாத், பத்ரிநாத், உத்தர்காசி பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் ஹெலிகாப்டர்கள் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கும் பகுதிகளுக்குச் சென்று உணவு, குடி தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கிவிட்டு கொஞ்சம், கொஞ்சமாக மக்களை மீட்டுக் கொண்டு வரும். இப்படியாக இதுவரை 80,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பத்ரிநாத், ஹர்சில் , ஜோஷிமாத் ஆகிய பகுதிகளில் இன்னும் 8,000 பேர் மீட்கப்பட வேண்டிய நிலையில் அடிக்கடி மாறும் வானிலையில் அவ்வப்போது மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்படுவதும் பின்னர் மீட்புப் பணி மீண்டும் நடப்பதுமாகவும் இருக்கிறது. ரிஷிகேஷில் இருந்து கேதார்நாத் 300 கி.மீ., தூரத்தில் இருக்கிறது. ஆனால் ரிஷிகேஷில் இருந்து ருத்ரபிரயாக் என்ற இடம் வரையிலும் தான் தற்காலிகமாக சாலை ஓரளவுக்கு செப்பணிடப்பட்டுள்ளது. ருத்ரபிரயாக்கில் இருந்து கேதார்நாத் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத், ஹர்சில் , ஜோஷிமாத் பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஏற்கனவே இயற்கைச் சீற்றத்தால் சிக்கித் தவிக்கும் மக்களிடம் சில இரக்கமற்ற அரக்கர்கள் நகை திருட்டு, பணம் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொதுமக்கள் சிக்கிக் கொண்ட இடங்களில் சில ராணுவ வீரர்களும் பாதுகாப்புக்காக இறக்கி விடப்பட்டுள்ளனர்.கேதார்நாத்தில் குவியல், குவியலாக கிடக்கும் சடலங்களை உரிய மரியாதையுடன் மொத்தமாக எரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குவிந்து கிடக்கும் சடலங்களால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

யார் காரணம்: பல ஆயிரக்கணக்கான உயிர்கள் சேதம், கட்டடங்கள் பல தரைமட்டமாகின, அடுத்த 2 ஆண்டுகளுக்கு கேதார்நாத் பயணம் மேற்கொள்ள முடியாது என அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணா கூறியுள்ளார். இத்துனை பெரிய பேரிடரை வானிலை ஆராய்ச்சி மையம் ஏன் முன்கூட்டிய கணித்து மாநில நிர்வாகத்திற்கு எச்சரிக்கவில்லை என்ற கேள்வி எழலாம்...
உத்தரகாண்ட் மாநிலம் முழுமையாக கண்காணிக்கப்பட 8 ரேடார்கள் தேவை. ஆனால் அம்மாநில வானிலை ஆராய்ச்சி மையத்திடம் இருப்பது என்னவோ வெறும் 2 ரேடார்கள் தான். அதுவும் மாநிலத்தின் கிழக்குப் பகுதியை காண்காணிக்காது. கண்காணிப்பு வளையத்தில் இல்லாத கிழக்குப் பகுதியில் தான் கேதார்நாத் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் ஒரு முக்கிய இடத்தை எப்படி கண்காணிப்பு வளையத்துக்குள் அம்மாநில அரசு வைக்கத் தவறியது என்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, லட்சக்கணக்கான மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சிக்கியிருக்க வெறும் 45 ஹெலிகாப்டர்களை மட்டுமே மீட்புப் பணியில் மாநில அரசு ஈடுபடுத்தியுள்ளதும், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிமக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் செலுத்தும் கவனம் இது தானா என்ற அதிருப்தி அலையை உருவாக்கியுள்ளது.இந்தச்சூழலில், அண்மையில் கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், பிரதமர் மன்மோகசன்சிங்கிடம் உத்தரகாண்ட் பாதிப்பை அடுத்து, அமர்நாத் யாத்திரையை முறைப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப: உத்தரகண்ட்டில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, நாட்டில் ஆன்மிக சுற்றுலாவை முறைப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்தி இருப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில் இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ருத்ர பூமியில் இயற்கை ஒரு பெரிய ருத்ர தாண்டவம் ஆடியுள்ள நிலையில், இனியாவது இயற்கைப் பேரிடர் நேரங்களில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க விரிவான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துமா? இது மக்களின் குரல்.




« PREV
NEXT »

2 comments

பெங்களூர் இரவிச்சந்திரன் said...

தமிழர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட பணமும், கருவிகளும் இந்திய கட்டுமானத்திற்காக பயன்படுத்தியிருந்தால் இத்தகைய பேரிடரை சமாளித்திருக்கலாம்.

மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

பெங்களூர் இரவிச்சந்திரன் said...

தமிழர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட பணமும், கருவிகளும் இந்திய கட்டுமானத்திற்காக பயன்படுத்தியிருந்தால் இத்தகைய பேரிடரை சமாளித்திருக்கலாம்.

மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.