இனி குடும்பம் எனது வாழ்கை என
சினிமாவுக்கு முழுக்குப் போடும்
நாயகிகள் பலரும் மீண்டும் ஒரு கட்டத்தில்
அம்மா, அண்ணி, அக்கா வேடங்களுடன் ரீ
என்ரி ஆவார்கள். இதில் ஒரு சில நாயகிகளே விதி விலக்கு.
திருமணத்திற்கு பின்னர் மீண்டும்
சினிமாவிற்குள் நுழையும் நடிகைகளின்
பட்டியலில் விரைவில் ஜோதிக்காவும்
இணைந்து விடுவார் எனத்
தெரிவிக்கப்படுகின்றது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்ற
முடிவில் இருந்த ஜோ. சூர்யாவுக்காக
ஒரே ஒரு விளம்பரப் படத்தில் மட்டும் அவருடன்
ஜோடியாக நடித்தார். தற்போது திருமணமான பிறகும் சினேகாவுக்கு வாய்ப்புகள் குவிவதைப் பார்த்துஇ ஜோதிகாவுக்கும்
நடிப்பு ஆசை துளிர்விட்டிருக்கிறதாம். இன்றைக்கு டி.வி.இ பத்திரிகைகள் எதைப் பார்த்தாலும்
எல்லா விளம்பரங்களிலும் பிரசன்னா - சினேகா ஜோடியாக இருப்பதைப் பார்த்துஇ 'நாமும்
இப்படி நடித்திருக்கலாமே' என்று சூர்யாவிடம் கேட்டதாகச் சொல்கிறார்கள். 'அதுக்கென்ன? இனிமேல் நடித்தால் போச்சு' என சூர்யாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். தவிரஇ
சினிமாவிலும் நடிக்கும் ஆசை இருப்பதை ஜோ தயக்கத்துடன் வெளிப்படுத்தஇ யோசித்த சூர்யாஇ 'நல்ல
கேரக்டர்கள் என்றால் பார்க்கலாம்' என சொல்லியிருக்கிறாராம். 'ஹரிதாஸ்' சினேகாஇ 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' ஸ்ரீதேவி போல நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம் கிடைத்தால் சூர்யா - ஜோ இருவருக்கும் சம்மதமாம். குழந்தைகள் இருவரும் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால் விரைவில்
ஜோதிகாவை திரையில் பார்க்கலாம் என கொலிவூட்டில் கிசுகிசுக்கிறார். ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்று சொல்லுறது சரிதான்!
No comments
Post a Comment