முல்லைத்தீவு, தேவிபுரம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த இளைஞர் படுகாயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று நண்பகல் குறித்த இளைஞர் வயல்வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது கட்டு மீறி ஓடிய மாட்டை துரத்திச் சென்ற இளைஞர் மீது இராணுவச் சிப்பாய் தாக்குதல் நடத்தியதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த இளைஞன் வீதியில் வந்த
இராணுவத்தினரை பார்த்துவிட்டு ஓடியதாகவும் அதனால் சந்தேகப்பட்டே தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் படையினர் விளக்கம் கொடுத்திருக்கின்றனர். இச்சம்பவத்தில் தேவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கே.பாஸ்கரன் (வயது34) என்ற
இளைஞரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலை அவசர
சிகிச்சைப் பிரிவில் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment